பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி 3வது சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

Added : அக் 03, 2021
Share
Advertisement
தர்மபுரி: புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, தர்மபுரி அடுத்த, புலிக்கரை ஸ்ரீபெருமாள் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பக்தர்கள் கோவில் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி அடுத்த செட்டிக்கரை பெருமாள் கோவில், அதகபாடி லஷ்மிநாராயண சுவாமி கோவில், தொப்பூர் வீர ஆஞ்சநேயர்

தர்மபுரி: புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, தர்மபுரி அடுத்த, புலிக்கரை ஸ்ரீபெருமாள் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பக்தர்கள் கோவில் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி அடுத்த செட்டிக்கரை பெருமாள் கோவில், அதகபாடி லஷ்மிநாராயண சுவாமி கோவில், தொப்பூர் வீர ஆஞ்சநேயர் கோவில், இலக்கியம்பட்டி நித்ய கல்யாணபெருமாள் கோவில் உள்பட, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.

* அரூர் கரிய பெருமாள் கோவில், சந்தைமேட்டிலுள்ள பெருமாள் கோவில், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, எம்.வெளாம்பட்டி, மருதிப்பட்டி, தீர்த்தமலை, மொரப்பூர் ஆகிய பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.


* காரிமங்கலம் அடுத்த பூமாண்டஹள்ளி பஞ்., மோதூரில் மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் பூஜை நடந்தது. காலை, 8:00 மேல், 9:00 மணிக்குள் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.


* கிருஷ்ணகிரியில், கனவாய்ப்பட்டி வெங்கட்ரமண சாமி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பாளேகுளி அனுமந்தராய சாமி கோவில், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் பெருமாள் சன்னதி, மலையப்ப சீனிவாச பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. கனவாய்ப்பட்டி பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்ததால், 2 கி.மீ., தூரத்திலேயே வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X