பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான தொழிலாளர்கள் 168 பேருக்கு நலத்திட்ட உதவி

Added : அக் 03, 2021
Share
Advertisement
தர்மபுரி: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், தொழில் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் தொழில்

தர்மபுரி: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், தொழில் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் தொழில் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். வாரிய உறுப்பினர்கள் அடையாள அட்டையை காண்பித்து மருத்துவ சிகிச்சை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உழவு தொழில் செய்வோருக்கு மட்டும் தனி அடையாள அட்டை வழங்க உள்ளோம். கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் இணையவழியில் பதிவு செய்வதற்கு பதிவு முறையை எளிமையாக வர இருக்கிறது. வாரியத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை அனைத்தும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தொழிலாளர்கள் நலவாரியம் எளிமை ஆக்குவதற்கு ஆவணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார். மொத்தம், 168 பயனாளிகளுக்கு, 11, லட்சத்து, 99 ஆயிரத்து, 700 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இந்தியா, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் பழனி, தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X