திரவுபதியம்மன் கோவில் திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திரவுபதியம்மன் கோவில் திருவிழா

Added : அக் 03, 2021
Share
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியிலுள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. மகாபாரத பஞ்ச பாண்டவர்களை மையமாக கொண்டு, பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில், திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, திரவுபதி, தர்மர், பீமன், அர்ச்சுணன், நகுலன், சகாதேவன், கிருஷ்ணன், அபிமன்யு உள்ளிட்ட, 17 கடவுள்களின் சிலை உள்ளது. பென்னாகரம் சுற்றுவடட்டாரத்தில்

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியிலுள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. மகாபாரத பஞ்ச பாண்டவர்களை மையமாக கொண்டு, பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில், திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, திரவுபதி, தர்மர், பீமன், அர்ச்சுணன், நகுலன், சகாதேவன், கிருஷ்ணன், அபிமன்யு உள்ளிட்ட, 17 கடவுள்களின் சிலை உள்ளது. பென்னாகரம் சுற்றுவடட்டாரத்தில் பிரசித்திபெற்ற இக்கோவில், கூத்தப்பாடி, குள்ளாத்திரம்பட்டி, பொச்சாரம்பட்டி, அளேபுரம், அக்ரஹாரம், மடம், சின்னப்பநல்லூர் உள்ளிட்ட ஏழு ஊர்களுக்கு பொதுவானது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், மூன்றாவது சனிக்கிழமை இக்கோவில் திருவிழா நடப்பது வழக்கம். நேற்று தொடங்கிய திருவிழாவில், கூத்தப்பாடியில் சுவாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, சுவாமி சிலைகள் குள்ளாத்தரம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று தீமிதி விழா நடக்கிறது. தொடர்ந்து, ஒவ்வொரு நாள் என, மீதமுள்ள ஐந்து ஊர்களுக்கும் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, விமர்சையாக கொண்டாடப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X