சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை

Added : அக் 03, 2021
Share
Advertisement
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த மோதுகுலஹள்ளி பஞ்., உட்பட்ட சோமனஹள்ளி முதல் அருந்ததியர் காலனி வரை கடந்த மூன்று வருடமாக சாலை சேதமாகி குண்டு குழியுமாக உள்ளது. இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தாங்கள் விளைவித்த விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரவும் இச்சாலை பிரதானமாக உள்ளது. இவ்வழியாக இரு

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த மோதுகுலஹள்ளி பஞ்., உட்பட்ட சோமனஹள்ளி முதல் அருந்ததியர் காலனி வரை கடந்த மூன்று வருடமாக சாலை சேதமாகி குண்டு குழியுமாக உள்ளது. இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தாங்கள் விளைவித்த விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரவும் இச்சாலை பிரதானமாக உள்ளது. இவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது டயர் பஞ்சராகியும், வாகனம் பழுதும் ஏற்படுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சோமனஹள்ளி முதல் முருக்கம்பட்டி வரை தார்ச்சாலை அமைத்த அதிகாரிகள், அங்கிருத்து அருந்ததியர் காலனி வரை சுமார், 3 கி.மீ., வரையுள்ள தார்ச்சாலையை சீரமைக்காமல் புறக்கணித்துள்ளது, அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X