சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை வெட்டிய கணவருக்கு வலை

Added : அக் 03, 2021
Share
Advertisement
மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த எலவடையை சேர்ந்தவர் தேவராஜ், 52, கூலித்தொழிலாளி; இவரது தம்பி தீத்து மகள் ஸ்ரீதேவி என்பவரை மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். தம்பதியருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள ஸ்ரீதேவி பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு,

மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த எலவடையை சேர்ந்தவர் தேவராஜ், 52, கூலித்தொழிலாளி; இவரது தம்பி தீத்து மகள் ஸ்ரீதேவி என்பவரை மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். தம்பதியருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள ஸ்ரீதேவி பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, தேவராஜ் போடம்பட்டி வேடியப்பன் கோவில் அருகே வந்த போது, அவரை நாகராஜ் ஆபாசமாக பேசி, கத்தியால் வெட்டியுள்ளார். பின் வீட்டிற்கு சென்ற நாகராஜ், மனைவி ஸ்ரீதேவி அவரது அண்ணி செல்லம்மாள், 23, ஆகியோரையும் கத்தியால் வெட்டியுள்ளார். இது குறித்து தேவராஜ் புகார்படி, மொரப்பூர் போலீசார் நாகராஜை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X