கிணற்றில் மாணவன் சடலம் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் மாணவன் சடலம் மீட்பு

Added : அக் 03, 2021
Share
பாப்பாரப்பட்டி: மாரண்டஹள்ளி அருகே, கரகூரை சேர்ந்தவர் செல்வம். கட்டட மேஸ்திரி. இவர் மனைவி நிர்மலா. தம்பதி இருவரும் அடிக்கடி பணிக்காக வெளியூர் சென்று விடுவர். இவர்களது மகன் மணிகண்டன், 12, பாப்பாரப்பட்டி அருகே பிக்கம்பட்டியிலுள்ள நிர்மலாவின் தாய் வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனாவில் பள்ளி விடுமுறை என்பதால், நேற்று காலை

பாப்பாரப்பட்டி: மாரண்டஹள்ளி அருகே, கரகூரை சேர்ந்தவர் செல்வம். கட்டட மேஸ்திரி. இவர் மனைவி நிர்மலா. தம்பதி இருவரும் அடிக்கடி பணிக்காக வெளியூர் சென்று விடுவர். இவர்களது மகன் மணிகண்டன், 12, பாப்பாரப்பட்டி அருகே பிக்கம்பட்டியிலுள்ள நிர்மலாவின் தாய் வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனாவில் பள்ளி விடுமுறை என்பதால், நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன், வீடு திரும்பவில்லை. நேற்று மாலை பிக்கம்பட்டியிலுள்ள சமுதாய கிணற்றில் மாணவன் சடலமாக மிதந்தான். தகவலின்படி பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பென்னாகரம் தீயணைப்பு துறையினர் உதவியோடு மாணவனின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X