சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி ஓனர் மீது தாக்குதல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், ராஜேஸ்வரி லேஅவுட்டை சேர்ந்தவர் திருமால், 40; லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த, 30ல், அவரை நேரில் சந்தித்து பேசிய வாலிபர், ஜி.மங்கலதுக்கு வாடகைக்கு வரக்கூறி அழைத்துச்சென்றார். பாகலூர் அருகே கான்கார்டியா லேஅவுட் பகுதிக்கு வாகனத்தை அழைத்து செல்ல வாலிபர், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மூன்று வாலிபர்களுடன் பேருடன் சேர்ந்து, திருமாலை

ஓசூர்: ஓசூர், ராஜேஸ்வரி லேஅவுட்டை சேர்ந்தவர் திருமால், 40; லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த, 30ல், அவரை நேரில் சந்தித்து பேசிய வாலிபர், ஜி.மங்கலதுக்கு வாடகைக்கு வரக்கூறி அழைத்துச்சென்றார். பாகலூர் அருகே கான்கார்டியா லேஅவுட் பகுதிக்கு வாகனத்தை அழைத்து செல்ல வாலிபர், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மூன்று வாலிபர்களுடன் பேருடன் சேர்ந்து, திருமாலை கட்டையால் தாக்கினார். பின் அவர்கள் அங்கிருந்து தப்பினர். காயமடைந்த திருமாலுக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும், 50 வயது மதிக்கத்தக்க நபருக்கும் இடையே, கடந்த நான்கு ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. அதனால் அவர் தாக்கப்பட்டாரா என்பது குறித்து, பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X