மயானத்திற்கு சாலை வசதி கேட்கும் மக்கள்

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஓசூர்: தளி அடுத்த தேவகானப்பள்ளி பஞ்.,ல் உள்ள ராமய்யன் அக்ரஹாரத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மக்களுக்கென, தனியாக மயான வசதி உள்ளது. இதற்கு பஞ்., நிர்வாகம் மூலம், சுற்றுச்சுவர், தகன மேடை, மேற்கூரை மற்றும் போர்வெல் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மயானத்திற்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. அதனால் இறந்தவர்களை

ஓசூர்: தளி அடுத்த தேவகானப்பள்ளி பஞ்.,ல் உள்ள ராமய்யன் அக்ரஹாரத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மக்களுக்கென, தனியாக மயான வசதி உள்ளது. இதற்கு பஞ்., நிர்வாகம் மூலம், சுற்றுச்சுவர், தகன மேடை, மேற்கூரை மற்றும் போர்வெல் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மயானத்திற்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. அதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய எடுத்து செல்ல, புதர் மண்டிய வழியில்தான் மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X