ஓசூரில் மாநில பெண்கள் கைப்பந்து போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூரில் மாநில பெண்கள் கைப்பந்து போட்டி

Added : அக் 03, 2021
Share
ஓசூர்: ஓசூரில், நேற்று துவங்கிய மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், 14 அணிகள் பங்கேற்று விளையாடின. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ஈகிள் போர்ட்ஸ் கிளப் சார்பில், 19 வயதிற்கு உட்பட்ட, பெண்களுக்கான மாநில கைப்பந்து போட்டி நேற்று காலை துவங்கியது. ஓசூர், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா போட்டிகளை துவக்கி வைத்தார். சென்னை, மதுரை, கோவில்பட்டி,

ஓசூர்: ஓசூரில், நேற்று துவங்கிய மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், 14 அணிகள் பங்கேற்று விளையாடின. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ஈகிள் போர்ட்ஸ் கிளப் சார்பில், 19 வயதிற்கு உட்பட்ட, பெண்களுக்கான மாநில கைப்பந்து போட்டி நேற்று காலை துவங்கியது. ஓசூர், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா போட்டிகளை துவக்கி வைத்தார். சென்னை, மதுரை, கோவில்பட்டி, கோவை, சேலம், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 14 அணிகள் பங்கேற்றன. இன்று (அக்.,3) இறுதி போட்டி நடக்கிறது. போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசுக்கோப்பை, இரண்டாமிடம் பெறும் அணிக்கு, 15 ஆயிரம் ரூபாய், மூன்றாமிடத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய், நான்காவது இடத்தை பெறும் அணிக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், மாநில அளவிலான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு வாலிபால் அசோசியேஷன் கமிட்டி கன்வீனர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஏற்பாடுகளை, தாயுமானவன், மாணிக்கவாசகம் செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X