பொது செய்தி

தமிழ்நாடு

பட்ட மேற்படிப்பு மருத்துவ சங்க மாநில செயற்குழு

Added : அக் 03, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியிலுள்ள இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் பட்டமேற்படிப்பு மருத்துவ சங்கத்தின், 33வது மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைமை வகித்த மாநில தலைவர் டாக்டர்.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு மருத்துவர்களுக்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசுப்பணியிலுள்ள மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ்.,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியிலுள்ள இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் பட்டமேற்படிப்பு மருத்துவ சங்கத்தின், 33வது மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைமை வகித்த மாநில தலைவர் டாக்டர்.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு மருத்துவர்களுக்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசுப்பணியிலுள்ள மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்பில், 50 சதவீத இடஒதுக்கீட்டை அரசு மற்றும் இதர மருத்துவகல்லூரிகளில் வழங்க வேண்டும். கடந்த, 10 வருடங்களாக பணிமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு கூட்டம் முறையாக நடக்கவில்லை. கொரோனா காலங்களில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்த மருத்துவர்கள், சுகாதாரத்துறையினருக்கு சிறப்பு ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் இறந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு உதவித்தொகை மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.ராமலிங்கம், பொருளாளர் டாக்டர்.ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X