துபாய் எக்ஸ்போ கட்டுமான பணியில் விபத்து 3 பேர் பலி: 70 பேர் காயம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
துபாய்: மிகவும் எதிர்பார்ப்புடன் துவங்கிய ‛துபாய் எக்ஸ்போ 2020' கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.உலகின் மிக பிரம்மாண்டான ‛துபாய் எக்ஸ்போ 2020' நேற்று முன்தினம் துவங்கியது. இதில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதற்கான வளாகத்தை கடந்த 2019ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அரசு கட்டி வந்தது. துபாயின் புறநகர்


துபாய்: மிகவும் எதிர்பார்ப்புடன் துவங்கிய ‛துபாய் எக்ஸ்போ 2020' கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உலகின் மிக பிரம்மாண்டான ‛துபாய் எக்ஸ்போ 2020' நேற்று முன்தினம் துவங்கியது. இதில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதற்கான வளாகத்தை கடந்த 2019ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அரசு கட்டி வந்தது. துபாயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நூற்றுக்கணக்கான பெவிலியன்கள் மற்றும் வசதிகளை உள்ளன. கட்டுமான பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். கட்டுமான பணியில் மனித உரிமை மீறல் அதிகளவில் நடப்பதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியது. மேலும், இந்த எக்ஸ்போவில் பங்கேற்க போவதில்லை எனவும் தெரிவித்திருந்தது. அதேநேரத்தில், இந்த வளாகம் உலக தரத்தில் அமைந்துள்ளதாக ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்துகளில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X