அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: ‛‛விவேகமும், பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட தி.மு.க., அரசுக்கு மக்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:சட்டசபை தேர்தலை போல், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர தி.மு.க.,விற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். உங்களால், முதல்வராக
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: ‛‛விவேகமும், பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட தி.மு.க., அரசுக்கு மக்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:

சட்டசபை தேர்தலை போல், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர தி.மு.க.,விற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். உங்களால், முதல்வராக பொறுப்பேற்றது முதல், இன்று வரை நாள்தோறும் உங்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். தேர்தலுக்கு முன் என்னென்ன வாக்குறுதிகளை தந்தோமோ அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது என்னிடம் நீங்கள் அளித்த மனுக்களில் பெரும்பாலானவற்றிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் இதை செய்து கொடுத்திருக்கிறோம் என்பது தான் தி.மு.க.,வின் தனித்தன்மை.


latest tamil news



பத்தாண்டு காலம் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால், அவர்கள் இரண்டு தேர்தலின்போதும் கொடுத்த வாக்குறுதியை 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. ஆனால், நாங்கள் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.அதுவும் 4 மாதங்களில் நிறைவேற்றிய அரசு இந்தியாவிலேயே தி.மு.க., அரசாக தான் இருக்கும். இத்தகைய விவேகமும், பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட அரசுக்கு மக்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

வருங்காலத்தில் இன்னும் ஏராளமான திட்டங்களை கொண்டு வர உள்ளோம். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். நாங்கள் எவ்வளவு சிறந்த திட்டங்களை தீட்டினாலும் அது பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தான் மக்களை சென்று சேரும். அதற்கு எவ்விதமான தடையும் இல்லாமல் எல்லா திட்டங்களும் மக்களை போய் சேர வழிவகுக்கும் விதமாக உங்கள்ஓட்டுகள் அமைய வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்வதற்கான வாய்ப்புகள் அமையும். மக்களுக்காக செயல்படுகிறோம் மக்களுக்காகவே சிந்திக்கிறோம். மக்களே, எங்களை பயன்படுத்தி கொண்டு உத்தரவிடுங்கள். உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். இவ்வாறு ஸ்டாலின் அதில் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
03-அக்-202122:10:06 IST Report Abuse
R.MURALIKRISHNAN ஐ... மொதல்ல சொன்ன மூணும் மக்களாகிய நாங்கள் உங்களை பார்த்து சொல்லனும். ஓ.....இதுதான் நமக்கு நாமே திட்டமா.அப்ப மக்களுக்கு நாமமா
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
03-அக்-202121:57:51 IST Report Abuse
a natanasabapathy ஹிந்து விரோத போக்கை தீவிரமாக கடை பிடித்து கோவில்களில் இறைவனை வழிபட தடை விதித்து விட்டு ஆதரவு கேட்டால் yeppadi கிடைக்கும். மக்கள் விழித்து கொண்டு விட்டனர் இனியும் ஏமாற்ற முடியாது
Rate this:
Cancel
03-அக்-202119:09:04 IST Report Abuse
S. Balakrishnan. திமுகவுக்கு மக்கள் கொடுத்த ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்து இந்த கொக்கரிப்பு !உங்கள் வழக்கமான பணிகளை விஞ்ஞான முறையில் செம்மனே செய்து முடியுங்கள். தமிழகத்துக்கு விடியல் ஒரு கேடா ? தந்தை வழியில் தவறாமல் வெற்றி நடை போடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X