பொது செய்தி

தமிழ்நாடு

வன பாதுகாப்பு சட்டத்தில் வெங்கடாசலம் மீது வழக்கு

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை : தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் மீது, தமிழக வன பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக வனத் துறையில் பல்வேறு பதவி வகித்த வெங்கடாசலம், 2018ல் ஓய்வு பெற்றார். பின், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். தன் பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், சொத்து சேர்த்ததாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை


சென்னை : தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் மீது, தமிழக வன பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வனத் துறையில் பல்வேறு பதவி வகித்த வெங்கடாசலம், 2018ல் ஓய்வு பெற்றார். பின், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். தன் பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், சொத்து சேர்த்ததாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து, அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத, 13 லட்சம் ரூபாய், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள், ஆறு கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில், சந்தன மரக்கட்டைகளை, சென்னை வனச் சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். வனத் துறை சட்டத்தின்படி, உரிய அனுமதி பெறாமல், சந்தனக் கட்டையை வைத்திருப்பது குற்றம். ஒருவர் குறைந்தபட்சம், ஐந்து கிலோ சந்தன மரத்தால் செய்யப்பட்ட கலை பொருட்களை வைப்பதற்கு மட்டுமே அனுமதி.அதற்கு மேல் வைத்திருந்தால், வனத் துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம். எனவே, 15 கிலோ சந்தன கட்டை வைத்திருந்த, வெங்கடாசலம் மீது, வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X