கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உள்ஒதுக்கீட்டில் அரசியல் இல்லை ஐகோர்ட்டில் ராமதாஸ் பதில் மனு

Added : அக் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : 'வன்னிய சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ம.க., தலைவர் ராமதாஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னிய சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர்


சென்னை : 'வன்னிய சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ம.க., தலைவர் ராமதாஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னிய சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டிருந்த பா.ம.க., தலைவர் ராமதாஸ் சார்பில், வழக்கறிஞர்கள் கே.பாலு, ஜோதிமணியன் தாக்கல் செய்த பதில் மனு:
வன்னிய சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றியதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. சட்டம் இயற்ற, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த, தற்போதைய அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்ஒதுக்கீடு குறித்து ஆராய, நீதிபதி குலசேகரன் ஆணையம் அமைக்கப்படவில்லை; 69 சதவீத ஒதுக்கீட்டை உயர்த்துவது, மாற்றியமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆராயவே, இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.நீதிபதி குலசேகரன் ஆணையத்துக்கும், தற்போதைய சட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.முதல் முறையாக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது போல், பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீடு, 2007ல் வழங்கப்பட்டுள்ளது; 3 சதவீத உள்ஒதுக்கீடு, அருந்ததியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.வன்னிய சமூகத்தினரின் மக்கள் தொகை, தமிழகத்தில் அதிகம் உள்ளது. அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாததால், 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

மற்ற சமூகத்தினருடன், வன்னிய சமூகத்தினரை ஒப்பிடக் கூடாது.எனவே, வன்னிய சமூகத்தினருக்கான உள்ஒதுக்கீட்டை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X