ரூ.17 லட்சம் முறைகேடு: ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்| Dinamalar

ரூ.17 லட்சம் முறைகேடு: ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'

Added : அக் 03, 2021
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கஸ்துாரிரெங்கபுரத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.17 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ராதாபுரம் அருகே கஸ்துாரி ரெங்கபுரம் ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி வாழவந்தாள்கணபதி அதே ஊராட்சியில் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கஸ்துாரிரெங்கபுரத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.17 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.



ராதாபுரம் அருகே கஸ்துாரி ரெங்கபுரம் ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி வாழவந்தாள்கணபதி அதே ஊராட்சியில் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். கஸ்துாரிரெங்கபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற ஒப்பந்ததாரரின் வங்கி கணக்கிற்கு 11 லட்சத்து 74 ஆயிரத்து 688 ரூபாய் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சென்றுள்ளது. இதே போல சுப்பையா என்ற ஒப்பந்ததாரரின் வங்கி கணக்கிற்கு 5 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் சென்றுள்ளது.

இசக்கிமுத்துவிடம் பேசிய ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன், 'வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து என் மனைவி பெயருக்கு அனுப்ப வேண்டிய பணத்தை தற்போது அவர் தேர்தலில் நிற்பதால் உங்கள் கணக்கிற்கு அனுப்ப கூறியுள்ளேன். அதனை எனக்கு ஒரு காசோலை மூலம் திரும்ப தரும்படி கேட்டுள்ளார்.குடிநீர் பைப்லைன் திட்ட ஒப்பந்தம் அவருக்கு தரப்பட்டுள்ளது.

ஆனால் பணிகள் துவங்காத நிலையில் அரசிடம் இருந்து பணம் வந்திருப்பதால் அதிர்ச்சியடைந்த இசக்கிமுத்து, இதுகுறித்து கலெக்டர் விஷ்ணுவிடம் புகார் அளித்தார். விசாரித்த கலெக்டர் , ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியத்தை 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிட்டார். இது குறித்து விசாரிக்கும்படி சேரன்மகாதேவி சப்கலெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிட்டார்.

கலெக்டர் கூறுகையில், ஊராட்சி செயலரை 'சஸ்பெண்ட்' செய்துஉள்ளோம். சப் கலெக்டர்விசாரணைக்கு பிறகு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X