சத்தீஸ்கரில் முதல்வர் மாற்றம்? பூபேஷ் பாகேல் மறுப்பு!

Added : அக் 03, 2021
Share
Advertisement
ராய்ப்பூர் : பஞ்சாபை தொடர்ந்து காங்., ஆளும் சத்தீஸ்கரிலும் முதல்வர் மாற்றப்படலாம் என, தகவல் பரவியதை அடுத்து, இதனை மறுத்த முதல்வர் பூபேஷ் பாகேல், ''சத்தீஸ்கர் ஒருபோதும் பஞ்சாப் ஆகாது,'' என தெரிவித்துள்ளார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, மாநில காங்., தலைவராக இருந்த சித்துவுக்கும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் மோதல்

ராய்ப்பூர் : பஞ்சாபை தொடர்ந்து காங்., ஆளும் சத்தீஸ்கரிலும் முதல்வர் மாற்றப்படலாம் என, தகவல் பரவியதை அடுத்து, இதனை மறுத்த முதல்வர் பூபேஷ் பாகேல், ''சத்தீஸ்கர் ஒருபோதும் பஞ்சாப் ஆகாது,'' என தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, மாநில காங்., தலைவராக இருந்த சித்துவுக்கும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்.பஞ்சாபை அடுத்து, காங்., ஆளும் சத்தீஸ்கர் அரசின் தலைமையிலும் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என சந்தேகம் எழுந்தது.

சத்தீஸ்கர் மூத்த காங்., தலைவரும், அமைச்சருமான சிங் தியோ, முதல்வர் பதவியை கேட்டு அடம் பிடித்து வருகிறார்.இதற்கிடையே, சத்தீஸ்கர் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் திடீரென டில்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து சத்தீஸ்கர் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் நேற்று கூறியதாவது:

எம்.எல்.ஏ.,க்கள் சுதந்திரமானவர்கள். அவர்களுக்குயாரும் தடை விதிக்க முடியாது. அவர்கள் டில்லிசென்றது, அரசியல் ரீதியிலான பயணம் அல்ல.சத்தீஸ்கர் எப்போதும் சத்தீஸ்கராகவே இருக்கும். எந்த சூழ்நிலையிலும் இது பஞ்சாப் ஆகாது. அங்கு நடந்தது இங்கு நிச்சயம் நடக்காது. இரு மாநிலங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, அவற்றின் பெயர்களில்எண்கள் இருப்பது மட்டுமே.பஞ்சாப் என்ற பெயரில் ஐந்தும், சத்தீஸ்கரில் ஏழு என்ற எண்ணும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ராகுலுடன் இருப்பேன்: சித்து திட்டவட்டம்

பஞ்சாப் காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து, மஹாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி பிறந்த நாளை முன்னிட்டு, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

காந்தி மற்றும் சாஸ்திரியின் கொள்கைகளை நிலைநாட்டுவேன். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ராகுல் மற்றும் பிரியங்காவுடன் நிற்பேன். எதிர்மறை சக்திகள் ஒருங்கிணைந்து தோற்கடிக்க முயற்சிக்கட்டும்; ஆனால் நேர்மறையான சக்தி பஞ்சாபை வெற்றி அடைய செய்யும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X