சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் ஜாதி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 'டிஸ்மிஸ்'

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருநெல்வேலி : ஜாதிமோதலில் ஈடுபட்ட நெல்லை செயின்ட் ஜான்ஸ் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் 9 பேர் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,அலுவலகம் அருகே செயின்ட் ஜான்ஸ் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளிமுடிந்து செல்லும்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ வெளியானது. இதுகுறித்து போலீசார்
 நெல்லையில் ஜாதி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 'டிஸ்மிஸ்'

திருநெல்வேலி : ஜாதிமோதலில் ஈடுபட்ட நெல்லை செயின்ட் ஜான்ஸ் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் 9 பேர் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,அலுவலகம் அருகே செயின்ட் ஜான்ஸ் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளிமுடிந்து செல்லும்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ வெளியானது. இதுகுறித்து போலீசார் விசாரித்தனர்.பள்ளி கரும்பலகை, மேஜைகளில் குறிப்பிட்ட ஜாதி பெயர்களை எழுதிப்போடுவதும் இன்னொரு தரப்பினர் அழிப்பதுமாக தகராறு நடந்துள்ளது.

அதை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதால் பள்ளி அருகிலேயே மோதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது. இரு ஜாதியை சேர்ந்த 9 மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அவர்களின் பெற்றோரை வரவழைத்து டி.சி.,கொடுக்கப்பட்டது. 2019ல் இதே பள்ளி மாணவர்கள் 50 பேர் வ.உ.சி.,மைதானத்தில் ஜாதி தகராறில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து 1330 குறள்களையும் எழுதி கொடுத்துவிட்டு பள்ளிக்கு செல்லும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் உத்தரவிட்டார். பெற்றோரையும் அழைத்து கண்டித்து எழுதி வாங்கினார்.

ஜாதி மோதலில் இளைஞர்கள்:
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம், மேலச்செவல், கோபாலசமுத்திரத்தில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து ஜாதி ரீதியான கொலைகள் நடந்தன. அங்கு பல்வேறு மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இத்தகைய ஜாதி கொலைகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 18 முதல் 20 வயதுடையவர்கள் தான். இத்தகைய மாணவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு பெற்றோர்களை வரவழைத்து கண்டித்து ,அவர்களுக்கு அறிவுரை சொல்லி திருத்தவேண்டும்.

பள்ளி, கல்லுாரியில் பயிலும் மாணவர்கள் கைகளில் ஜாதியின் கொடி வண்ணங்களை கொண்ட கயிறு கட்டுவது, அலைபேசிகளில் ஜாதியை புகழும் பாடல்களை பொது இடங்களில் ஒலிக்கவிடுவது, தங்களின் வாட்ஸ்ஆப்களில் ஜாதிசின்னங்களை டிபியில் வைத்திருப்பது என ஜாதி ரீதியான போக்கு அதிகரித்துள்ளது.

திருநெல்வேலியில் ஜாதிமோதலை முளையிலேயே கிள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும், போலீசும் மாணவர்களை ஒழுங்குப்படுத்த தவறினால் இனி வரும் ஆண்டுகளில் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி மோதல்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X