பவானிப்பூர் இடைத்தேர்தல்: மம்தா வெற்றி

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (46+ 8)
Share
Advertisement
கோல்கட்டா: பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி 58,832 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்து கொண்டார்.கடந்த ஏப்ரல் மாதம் மே.வங்க சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்த போதிலும் நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். எனினும் முதல்வராக பதவியேற்றார். ஆறு மாதததிற்குள்
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா: பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி 58,832 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்து கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் மே.வங்க சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்த போதிலும் நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். எனினும் முதல்வராக பதவியேற்றார். ஆறு மாதததிற்குள் மேற்கு வங்கத்தில் உள்ள ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும் என்ற சட்டசிக்கல் எழுந்தது.
இதையடுத்து, மம்தா போட்டியிட வசதியாக பவானிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்த சோபன் தேவ் தன் பதவியை ராஜினாமா செய்தார். பவானிப்பூர் உட்பட காலியாக இருந்த 3 தொகுதிகளுக்கு செப்.,30ல் தேர்தல் நடந்தது. மம்தாவை எதிர்த்து பா.ஜ.,வின் பிரியங்கா திப்ரேவால் களமிறங்கினார். காங்கிரஸ் போட்டியிடவில்லை. தேர்தலில் 53 சதவீதத்திற்கும் மேலாக ஓட்டுகள் பதிவாகின.


latest tamil news



தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. துவக்கம் முதலே, மம்தா பானர்ஜி முன்னிலை வகித்தார். இறுதியில் அவர் 58,832 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் முதல்வர் பதவியை மம்தா தக்க வைத்து கொண்டார். மம்தா வெற்றியை அறிந்த திரிணமுல் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news



வெற்றி பெற்றது தொடர்பாக மம்தா கூறுகையில், மாபெரும் வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி. பா.ஜ.,வின் சதி தோல்வி அடைந்தது. அனைத்து சமுதாயத்தினரும் எனக்கு ஓட்டு போட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (46+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
04-அக்-202101:06:26 IST Report Abuse
Aarkay ஐயோ பாவம் மேற்குவங்க மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டுள்ளனர். அனுபவியுங்கள்.
Rate this:
Cancel
03-அக்-202123:11:27 IST Report Abuse
THALA Nachi ரைட்...விடு...
Rate this:
Cancel
natesa -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202122:14:59 IST Report Abuse
natesa excellent
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X