சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிர் பானம் என நினைத்து மது குடித்த 4 வயது பேரன் பலி: அதிர்ச்சியில் தாத்தாவும் இறந்தார்

Added : அக் 03, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் அருகே குளிர் பானம் என நினைத்து தாத்தா மிச்சம் வைத்திருந்த மதுவை குடித்த நான்கு வயது பேரன் இறந்தார், அதிர்ச்சியில் தாத்தாவும் இறந்தார்.வேலுார் மாவட்டம், திருவலம் அருகே சுகர்மில் அண்ணா நகரை சேர்ந்தவர் சின்னசாமி, 62. விவசாயி அவர் மகன் சுந்தரம், 49. மகள் விஜயா, 35. இருவருக்கும் திருமணமாகி விட்டது. விஜயா மகன் ருத்ரேஷ், 4. இவர்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.



வேலுார்: வேலுார் அருகே குளிர் பானம் என நினைத்து தாத்தா மிச்சம் வைத்திருந்த மதுவை குடித்த நான்கு வயது பேரன் இறந்தார், அதிர்ச்சியில் தாத்தாவும் இறந்தார்.
வேலுார் மாவட்டம், திருவலம் அருகே சுகர்மில் அண்ணா நகரை சேர்ந்தவர் சின்னசாமி, 62. விவசாயி அவர் மகன் சுந்தரம், 49. மகள் விஜயா, 35. இருவருக்கும் திருமணமாகி விட்டது. விஜயா மகன் ருத்ரேஷ், 4. இவர்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். குடிப்பழக்கம் உள்ள சின்னசாமி தினமும் மது பாட்டில்கள் வாங்கி வந்து வீட்டில் குடிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 1 ம் தேதி சின்னசாமிக்கு பிறந்த நாள் வந்தது. இதற்காக இரவு 7:00 மணிக்கு வீட்டில் அவர் மது குடித்து விட்டு போதையில் படுத்து துாங்கி விட்டார். அவருக்கு பக்கத்தில் உள்ள டம்ளரில் சிறிது மதுவும், சிக்கன், மட்டன் துண்டுகள் இருந்தன.அப்போது அங்கு வந்த பேரன் ருத்ரேஷ், குளிர் பானம் என நினைத்து டம்ளரில் மிச்சமிருந்த மதுவை குடித்து சிக்கனையும் சாப்பிட்டுள்ளார். இதில் சிக்கன் தொண்டையில் அடைத்துக் கொண்டது. மது குடித்ததால் வாந்தி எடுத்து சிறுவன் மயக்கம் போட்டு விழுந்தான்.இதை பார்த்த தாத்தா சின்னசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வேலுாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சின்னசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.இன்று காலை 10:00 மணிக்கு சிறுவன் ருத்ரேஷ் இறந்தான். திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X