சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி 3 மின் கம்பங்கள் சேதம் 25 கிராமங்களுக்கு கரண்ட் கட்

Added : அக் 03, 2021
Share
Advertisement
அரக்கோணம்: அரக்கோணம் அருகே, லாரி மோதி மூன்று மின் கம்பங்கள் சேதமடைந்ததால் 25 கிராமங்கள் இருளின் மூழ்கின.சென்னை கிண்டி தொழில் பேட்டையில் இருந்து, ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டனத்திற்கு கார் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு கன்டெயனர் லாரி ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வழியாக நேற்று இரவு 10:00 மணிக்கு சென்றது. நெமிலி மெயின் சாலையில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து
லாரி மோதி 3 மின் கம்பங்கள் சேதம் 25 கிராமங்களுக்கு கரண்ட் கட்



அரக்கோணம்: அரக்கோணம் அருகே, லாரி மோதி மூன்று மின் கம்பங்கள் சேதமடைந்ததால் 25 கிராமங்கள் இருளின் மூழ்கின.
சென்னை கிண்டி தொழில் பேட்டையில் இருந்து, ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டனத்திற்கு கார் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு கன்டெயனர் லாரி ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வழியாக நேற்று இரவு 10:00 மணிக்கு சென்றது. நெமிலி மெயின் சாலையில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மூன்று மின் கம்பங்கள் மீது மோதியது. இதில் மூன்று மின்கம்பங்களும் உடைந்து ஒயர்கள் அறுந்து விழுந்தது. லாரியை ஓட்டி சென்ற விழுப்புரத்தை சேர்ந்த டிரைவர் கணேசன், 45, கீழே விழுந்து உயிர் தப்பினார்.

நெமிலி தீயணைக்கும் துறையினர் மின் இணைப்பை துண்டித்து அறுந்து கிடந்த ஒயர்களை அப்புறப்படுத்தினர். மின் கம்பங்கள் உடைந்ததால் நெமிலி, பாக்கம் உள்ளிட்ட 25 கிரமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. மின்சாரத்துறையினர் இன்று மதியம் 2:00 மணிக்கு மின் கம்பங்களை சரி செய்த பிறகு தான் அப்பகுதியில் மீண்டும் மின் சப்ளை வழங்கப்பட்டது. அரக்கோணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X