சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டா மாற்றக்கோரி 4 மணி நேரம் கோவில் மணி அடித்த சகோதரிகள்

Added : அக் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம் : குடியிருப்பு இடத்தை பட்டா மாற்றம் செய்து தரக்கோரி, நள்ளிரவில் சகோதரிகள், தொடர்ந்து 4 மணி நேரம் கோவில் மணி அடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அடுத்த காணை கோனுார் கிராமத்தில், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 89 குடும்பங்களுக்கு 1991 ஜூலை 8ம் தேதி, அரசு சார்பில் தலா 3 சென்ட் இடம் ஒதுக்கி, வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.இதில் கிருஷ்ணன் மனைவி

விழுப்புரம் : குடியிருப்பு இடத்தை பட்டா மாற்றம் செய்து தரக்கோரி, நள்ளிரவில் சகோதரிகள், தொடர்ந்து 4 மணி நேரம் கோவில் மணி அடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அடுத்த காணை கோனுார் கிராமத்தில், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 89 குடும்பங்களுக்கு 1991 ஜூலை 8ம் தேதி, அரசு சார்பில் தலா 3 சென்ட் இடம் ஒதுக்கி, வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.இதில் கிருஷ்ணன் மனைவி குப்பம்மாள் என்பவருக்கு, 71வது எண் வீடு ஒதுக்கப்பட்டது. இருவரும், 2000ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் மனைவி அம்பிகா பெயருக்கு, 8,500 ரூபாய் பெற்று கொண்டு கிராம மக்கள் முன்னிலையில் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

புருஷோத்தமன் 11 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அம்பிகா 21 நாட்களுக்கு முன் இறந்தார். இவரது 29 - 19 வயதுள்ள நான்கு மகள்கள் வசிக்கின்றனர். நால்வருக்கும் திருமணம் ஆகவில்லை. அரசு ஒதுக்கிய வீடுகளை 30 ஆண்டுகளுக்கு பின்னரே, அடுத்தவர் பெயருக்கு கிரைய பத்திரப்பதிவு செய்து கொடுக்க முடியும்.தற்போது வீடுகள் ஒதுக்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, புருஷோத்தமன் மகள்கள் நான்கு பேரும், தங்கள் பெயருக்கு வீட்டை கிரையம் செய்து கொடுக்குமாறு கிருஷ்ணனிடம் கூறியுள்ளனர். அதற்கு கிருஷ்ணன் மறுத்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் வாங்கிய 8,500 ரூபாயை கொடுத்து விடுகிறேன். அதை வாங்கி கொண்டு வீட்டைக் காலி செய்யுங்கள்' என தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த நால்வரும், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மணியை அடித்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக கோவில் இருந்ததால் மணி சத்தம் ஊர் மக்களுக்கு கேட்கவில்லை.இதனால், நான்கு பெண்களும் மாறி மாறி 4 மணி நேரம் மணி அடித்துள்ளனர். இரவு 11:30 மணியளவில் ஊர் மக்கள் திரண்டனர்.அங்கு வந்த காணை போலீசார் 4 பெண்களிடமும் புகார் அளிக்கும் படி கூறினர். போலீஸ் நிலையம் வரமாட்டோம். 'அதிகாரிகள் வந்து எங்கள் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

பின், நால்வரிடமும், விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். கிருஷ்ணன் எழுதிய பத்திரத்தை எடுத்து வருமாறும், அதை பட்டா மாற்றம் செய்து தருவதாகவும் உறுதியளித்தார். இதை தொடர்ந்து நால்வரும் நள்ளிரவு 12:00 மணியளவில் அங்கிருந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X