ரேஷன் அரிசி மூட்டை லாரியுடன் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி மூட்டை லாரியுடன் பறிமுதல்

Added : அக் 03, 2021
Share
திண்டிவனம் : திண்டிவனத்தில் சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை 10 டன் ரேஷன் அரிசி மூட்டைகளோடு போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சென்னை புறவழிச்சாலையில் தனியார் ஓட்டல் எதிரே நேற்று முன்தினம் இரவு முதல் லாரி, லோடுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார், லாரியை
 ரேஷன் அரிசி மூட்டை லாரியுடன் பறிமுதல்

திண்டிவனம் : திண்டிவனத்தில் சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை 10 டன் ரேஷன் அரிசி மூட்டைகளோடு போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சென்னை புறவழிச்சாலையில் தனியார் ஓட்டல் எதிரே நேற்று முன்தினம் இரவு முதல் லாரி, லோடுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார், லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டுவந்தனர். லாரியில் அரசு முத்திரை பதித்த சாக்கு மூட்டைகளில், 10 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிந்தது.லாரியை விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ரேகா மதி கூறுகையில், ''அரசு முத்திரை பதித்துள்ள மூட்டைகளாக இருப்பதால், பிற மாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி இறக்க செல்வதற்கு நிறுத்தி வைத்திருந்தார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X