அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனித்து போட்டி ஏன் ?: அன்புமணி

Added : அக் 03, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து காவேரிப்பாக்கம் சுமைதாங்கி பகுதியில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாவது: கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தோம். அவர்கள் 25 இடங்களில் இரண்டு மட்டும் கொடுத்தனர். அங்கும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினர். அதனால்தான் தற்போது

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து காவேரிப்பாக்கம் சுமைதாங்கி பகுதியில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாவது:

கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தோம். அவர்கள் 25 இடங்களில் இரண்டு மட்டும் கொடுத்தனர். அங்கும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினர். அதனால்தான் தற்போது தனித்து போட்டியிடுகிறோம். நீட் தேர்வு பிரச்னை சமூக நீதிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானது.

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதன் விளைவாக நீட் தேர்வை முறையாக எதிர்க்க முடியவில்லை. இதனால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோய் விட்டன. எனவே எல்லா சமுதாயத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு தேவை என பா.ம.க. போராடி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X