பனிச்சரிவில் சிக்கிய 4 வீரர்களின் உடல் மீட்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
உத்தரகாசி : உத்தரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களில், நான்கு பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.இந்திய கடற்படையைச் சோந்த 20 பேர் அடங்கிய குழு, உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள திரிசூல் சிகரத்தில் சமீபத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர் மாயமாகினர்.இவர்களை


உத்தரகாசி : உத்தரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களில், நான்கு பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

இந்திய கடற்படையைச் சோந்த 20 பேர் அடங்கிய குழு, உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள திரிசூல் சிகரத்தில் சமீபத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர் மாயமாகினர்.இவர்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று, ஹெலிகாப்டரில் சென்று நடத்திய தேடுதல் வேட்டையில் திரிசூல் சிகரத்தில் நான்கு உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள இருவரை தேடும் பணி தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X