கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு கலெக்டர் ஆய்விற்கு ரூ.10 ஆயிரம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 03, 2021
Share
Advertisement
மதுரை : டாஸ்மாக் கடைக்கு எதிரான வழக்கில், விதிமீறல் உள்ளதா என புதுக்கோட்டை கலெக்டர் ஆய்வு செய்ய மனுதாரர் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் தாக்கல் செய்த மனு: பட்டாத்திக்காடு அரசு மருத்துவமனை அருகே டாஸ்மாக் கடை துவக்க அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இடையூறு



மதுரை : டாஸ்மாக் கடைக்கு எதிரான வழக்கில், விதிமீறல் உள்ளதா என புதுக்கோட்டை கலெக்டர் ஆய்வு செய்ய மனுதாரர் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் தாக்கல் செய்த மனு:
பட்டாத்திக்காடு அரசு மருத்துவமனை அருகே டாஸ்மாக் கடை துவக்க அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படும். புதுக்கோட்டை கலெக்டர், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு புகார் அனுப்பினேன். டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி அமர்வு:
எந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கலாம் என்பதற்கு வழிகாட்டுதல்கள் உள்ளன. இது பின்பற்றப்படுவதை கலெக்டர் உறுதி செய்கிறார். கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அதற்கு முன் மனுதாரர் ரூ.10 ஆயிரத்தை கலெக்டரிடம் டெபாசிட் செய்ய வேண்டும். இல்லாவிடில் மனுதாரரின் மனு மீது கவனம் செலுத்துமாறு கலெக்டருக்கு உத்தரவிட இயலாது. வழிகாட்டுதல் மீறப்படவில்லை என கலெக்டரின் ஆய்வில் கண்டறிந்தால், டெபாசிட் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X