பொது செய்தி

தமிழ்நாடு

சிலைகள் திருட்டை தடுக்க கடுமையான சட்டம் தேவை

Added : அக் 03, 2021
Share
Advertisement
மதுரை : இந்தியாவில் சிலைகள் கடத்தலை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை, என சிலை மீட்பு ஆர்வலர் விஜய்குமார் கூறினார்.\இந்தியாவிலிருந்து திருடுபோன சுவாமி சிலைகள், கலைப்பொருட்களில்157 ஐ மீட்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. சிங்கப்பூரில் வசிக்கும் தன்னார்வலர்கள் விஜய்குமார், அனுராம் சக்சேனா 'இந்தியா பிரைட் புராஜக்ட்' அமைப்பை 2014 ல் துவக்கினர். பல


மதுரை : இந்தியாவில் சிலைகள் கடத்தலை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை, என சிலை மீட்பு ஆர்வலர் விஜய்குமார் கூறினார்.
\இந்தியாவிலிருந்து திருடுபோன சுவாமி சிலைகள், கலைப்பொருட்களில்157 ஐ மீட்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. சிங்கப்பூரில் வசிக்கும் தன்னார்வலர்கள் விஜய்குமார், அனுராம் சக்சேனா 'இந்தியா பிரைட் புராஜக்ட்' அமைப்பை 2014 ல் துவக்கினர். பல நாடுகளின் சமூக ஆர்வலர்கள் இதில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். திருடுபோன கலைப்பொருட்கள் இவர்களின் முயற்சியால் இந்தியாவிற்கு திரும்பி வருகின்றன.

200 சிலைகள் மீட்பு

சிலை மீட்பு ஆர்வலர் விஜய்குமார் சென்னையைச் சேர்ந்தவர். அவர் கூறியதாவது:
இந்தியாவில் திருடுபோன சிலைகளில் 1970-2000 வரை மீட்கப்பட்ட கலைப்பொருட்கள் 19 தான். 2000-12 வரை எதுவும் மீட்கப்படவில்லை. இந்தியா பிரைட் புராஜக்ட் அமைப்பு துவக்கப்பட்ட பின் 53 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 2013-14 லிருந்து 200 சிலைகளை மீட்டுள்ளோம். இந்திய கலைப்பொருட்கள் வெளிநாடுகளில் பகிரங்கமாக ஏலம் விடப்படுகிறது. தெய்வங்கள் காட்சிப்பொருட்களாக, பொம்மைகளாக வெளிநாட்டு மியூசியங்களில் உள்ளன. செல்வந்தர் வீடுகளில் நீச்சல் குளங்களில் அவை உள்ளன. இந்த அவல நிலையை போக்க எங்கள் அமைப்பு மூலம் நடவடிக்கை எடுத்தோம்.

ஆண்டுக்கு ஆயிரம் சோழர் கால செப்புத் திருமேனிகள் பற்றி ஆராய்ச்சி செய்தேன். புன்னை நல்லுாரில் 1971ல் நடராஜர் சிலை திருடு போனது. வேறு சிலையை கொடுத்து போலீசார் வழக்கை முடித்தனர்; பழைய சிலையை கண்டுபிடித்து தர முடியுமா என வயதான குருக்கள் தெரிவித்தார்.சிலையின் போட்டோ கிடைத்தது. உலகில் எங்கெல்லாம் இந்திய சிலைகள் உள்ளன விபரங்களை சமூக வலைத்தளம் மூலம் சேகரிக்கிறோம். அத்துடன் போட்டோவை ஒப்பிட்டு பார்த்தோம். நியூயார்க்கில் அச்சிலை இருந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, நியூயார்க்கில் உள்ள இந்திய துாதரகத்திற்கு தகவல் தெரிவித்தோம். சிலை மீட்கப்பட்டது.

ஆண்டுக்கு 1000 சிலைகள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. தமிழகத்தில் சிலைகளின் விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருடுபோன சிலைகள் எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது.நியூயார்க்கில் சுபாஷ் கபூருக்கு சொந்தமான இடங்களில் 2012 ல் சோதனை நடத்தப்பட்டது. அவர் நடத்திய கலை நிறுவனத்தில் 2222 சிலை, கலைப்பொருட்கள் இருந்தன. மதிப்பு ரூ.900 கோடி.

கடுமையான சட்டங்கள்

தமிழகத்தில் 1994- 2012 வரை 1300 சிலைகள் திருடுபோனதாக உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இன்டர்போல் உட்பட பல்வேறு அமைப்புகள் எங்கள் உதவியை நாடுகின்றன. இதுவரை அறநிலையத்துறை எங்கள் உதவியை நாடவில்லை. வந்தால் பல சிலைகளை மீட்கலாம்.எகிப்து, சீனாவில் சட்டங்கள் வலுவாக உள்ளது. துாக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் புராதன சிலைகள் திருட்டிற்கு வீடு புகுந்து திருடுவதற்குரிய சட்டப்பிரிவில்தான் வழக்குப் பதியப்படுகிறது. தமிழகத்தில் கோயிலில் புகுந்து திருடினால் மூன்றரை ஆண்டுகள், வீடு புகுந்து திருடினால் ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை என உள்ளது. திருடி விற்றால் பல கோடி கிடைக்கும். மாட்டினால் ரூ.3000 அபராதம்தான். அடிமட்டத்தில் உள்ளவர்கள் தான் சிக்கியுள்ளனர். சிலைகள் மீட்பில் பல மாநிலங்களுக்கு அக்கறை இல்லை. சிலைகள் கடத்தல் தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X