பொது செய்தி

தமிழ்நாடு

முடிவுரை எழுதிவிட்டு அறிக்கை தயார் செய்த ஏ.கே.ராஜன் கமிட்டி

Added : அக் 03, 2021
Share
Advertisement
மதுரை : ''நீட் தேர்வு குறித்து முடிவுரை எழுதி விட்டு ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை தயாரித்தது போல உள்ளதாக'' கல்வியாளர் சங்கரநாராயணன் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது சிறப்பு பேட்டி:நீட் தேர்வு குறித்து ஏ.கே. ராஜன் கமிட்டியின் சாப்டர் 2 ல் உலக மருத்துவக் கல்விக்கான கூட்டமைப்பில் கல்வியின் தரம் பற்றி பேசுகிறது. உலகளாவிய தரத்துடன் கல்வி இருக்க வேண்டும். ஒவ்வொருமதுரை : ''நீட் தேர்வு குறித்து முடிவுரை எழுதி விட்டு ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை தயாரித்தது போல உள்ளதாக'' கல்வியாளர் சங்கரநாராயணன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது சிறப்பு பேட்டி:
நீட் தேர்வு குறித்து ஏ.கே. ராஜன் கமிட்டியின் சாப்டர் 2 ல் உலக மருத்துவக் கல்விக்கான கூட்டமைப்பில் கல்வியின் தரம் பற்றி பேசுகிறது. உலகளாவிய தரத்துடன் கல்வி இருக்க வேண்டும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அறிக்கையில் சொல்கிறார். இவரே தான் பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து கேள்வி கேட்பதில்லை என்கிறார். இந்த இரண்டுக்கும் முரண்பாடு உள்ளது. நீட்டை எதிர்க்கின்ற கல்வியாளர்களில் சிலர் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கின்றனர். கல்வியின் தரத்தை எப்படி உயர்த்துவது என்பதை தெளிவாக விளக்கவில்லை.

புள்ளி விபரம் இல்லை

தனியார், சிபிஎஸ்இ பள்ளிகள் பெருகிவிட்டது. அரசுப் பள்ளி சேர்க்கை குறைந்து விட்டது என அறிக்கையில் உள்ளது. இந்த அறிக்கையை 2011 ல் இருந்து ஆய்வு செய்துள்ளனர். 1989 - 2006 வரை தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மருத்துவம், பொறியியல் தேர்வுக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை நீதியரசர் அனந்தகிருஷ்ணன் கமிட்டி மூலம் ஆய்வு செய்து நுழைவுத் தேர்வை ரத்து செய்தனர். அந்த நுழைவுத் தேர்வு மூலம் 1989 - 2006 வரை அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வளவு பேர் சேர்ந்திருந்தனர் என்ற தகவலை ஆய்வில் சேர்த்திருக்க வேண்டும். அதை சேர்க்கவில்லை.

நுழைவுத் தேர்வை 2006ல் நிறுத்திய பின் பிளஸ் 2 'கட் ஆப்' மதிப்பெண் மூலம் எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் சேர்ந்தனர் என்ற தகவல் புள்ளிவிவரம் அறிக்கையில் இல்லை. சாதகமாக 2011 ல் இருந்து தான் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

மனுக்கள் தயாரித்தது மாணவர்களா
தமிழகத்தில் 2006 வரை சொற்ப எண்ணிக்கையில் தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இருந்தன. தி.மு.க. சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வந்த பின்பே 150 ஆக இருந்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்தது. 2006 - 2011 வரை சி.பி.எஸ்.இ பள்ளிகள் எத்தனை இருந்தன, 2020 வரை எத்தனை சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இருக்கின்றன என்பதையும் அறிக்கையில் கூறவில்லை. இப்படி குழுவின் அறிக்கையை படிக்கும் போது நிறைய முரண்கள் உள்ளன.இப்படித்தான் வரவேண்டும் என முடிவுரை எழுதி விட்டு அறிக்கை தயார் செய்துள்ளனர்.

நீட் தேர்வு குறித்து 86 ஆயிரம் மனுக்கள் வந்ததாக தகவல் உள்ளது. அதில் 66 ஆயிரம் மனுக்கள் நீட்டுக்கு எதிராகவும் 18 ஆயிரம் ஆதரவாகவும் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது. எங்கேயும் மாணவர்கள் மனுக்களை தயாரித்ததாக சொல்லவில்லை. எல்லா இடத்திலும் பொதுமக்கள் என்றே குறிப்பிடுகின்றனர். பார்லிமென்டரி நிலைக்குழு கமிட்டி பொதுத்தேர்வு வைக்கலாம் என கூறியது.

நுழைவு தேர்வு
இந்திய அளவில் நுழைவுத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்றால் மாநிலங்கள் தங்கள் மாணவர் சேர்க்கைக்கு மாநில அளவில் பொது நுழைவுத்தேர்வு வைக்கலாம் என டாக்டர் ரஞ்சன் ராஜ் சவுத்ரி கமிட்டி கூறியிருந்தது.

இதனால் கேரளத் தேர்வு, தமிழகத் தேர்வு, ஆந்திரத் தேர்வு எல்லாம் வேறுவேறாக இருந்தது. மாநிலங்களுக்கு இடையிலேயே இவ்வளவு வேறுபாடு என்றால் உலகத்தரத்திற்கான கல்வி என்ற பேச்சே அடிபட்டு போய் விடுகிறது. எய்ம்ஸ், ஜிப்மரில் சேர்வதற்கு இரண்டு முறை தேர்வு எழுத வேண்டும். அதற்காக தான் நீட் தேர்வு வந்தது.சி.பி.எஸ்.இ, என்.சி.ஆர்.டி. பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத்திட்டம் உள்ளதென்று கல்வித்துறை செயலர் சொன்னார்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களும் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 90 சதவீத கேள்வி வந்ததாக தெரிவித்தனர். மறுபடியும் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வால் வரமுடியவில்லை என்றால் எங்கே குறை என அரசு கண்டுபிடிக்க வேண்டும்.அரசுப் பள்ளியில் நிறைய உள்கட்டமைப்பு உள்ளது. தனியார் பள்ளி மாணவனை விட அரசுப் பள்ளி மாணவனுக்கு இலவச புத்தகம், லேப்டாப், சைக்கிள் என அரசு அதிகம் செலவிடுகிறது. இவ்வளவு செலவு செய்தும் படிக்கக்கூடிய பாடத்திட்டத்தை மாற்றுகிறீர்கள். புதுமை கொண்டு வந்தும் நீட் முடிவுகள் சாதகமாக வரவில்லை என்றால் எங்கே கோட்டை விடுகிறாம்.

நிர்வாக சீர்கேடுகளால் மாணவர்களை குறைத்து மதிப்பிடுகிறோம். சமூக நீதி பாதிப்பு ஏற்படுகிறது என்று மாற்றி சொல்கிறோம். இதை ஏற்க முடியாது. இதை சரிசெய்வதற்கு ஏ.கே. ராஜன் அறிக்கையில் எங்கும் சொல்லவில்லை.நீட் கோச்சிங் நடத்தும் அரசுநீட் கோச்சிங் சென்டரை வரைமுறைப்படுத்துங்கள். தனியார் கோச்சிங் சென்டருக்கு நிறைய செல்வதாக அறிக்கையில் உள்ளது.

அரசே நீட் கோச்சிங் நடத்துகிறது. அப்படியென்றால் அரசின் நிலைப்பாடு என்ன. இன்னொரு இடத்தில் மாநில நுழைவுத் தேர்வு நடத்தலாம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின் நோக்கம் தேசிய நுழைவுத்தேர்வு வேண்டாம் என்பதா மாநில நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்பதா.தமிழகத்தில் மத்திய அரசின் 54 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவை எந்த பிரிவில் சேர்க்கப்பட்டது, எத்தனை மாணவர்கள் நீட் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர் என அறிக்கையில் சொல்லவில்லை.

மாவட்டங்கள் தோறும் பின்தங்கிய பகுதியில் 6 - 12 ம் வகுப்பு வரை ஏழை மாணவனுக்கு இலவச கல்வி அளிப்பது தான் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள். நவோதயா பள்ளிகள் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் உள்ளது. ஒருவேளை நவோதயா பள்ளிகள் இருந்தால் 38 பள்ளிகள், 54 கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் எல்லாம் மத்திய அரசுப் பள்ளி பட்டியலில் வரும். அவர்களும் அரசுப் பள்ளி மாணவர்கள் தான்.

அறிக்கை வரும் முன் தீர்மானம்
கேரளா, ஆந்திராவில் நவோதயா பள்ளி மாணவர்கள் நீட்டில் சாதிக்கின்றனர். மத்திய அரசுப் பள்ளி, தமிழக அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பிரித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை பட்டியல் இட்டிருக்க வேண்டும். அதைப் பற்றி எங்குமே பேசவில்லை. ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை வருவதற்கு முன்பே நீட் விலக்கு பெற வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மாணவர்களை மூளைச்சலவை செய்து மனப்பாடம் செய்ய வைத்து அதன் மூலம் வருகின்ற மதிப்பெண்களை வைத்து கல்வித்தரத்தை உயர்த்த முடியாது. நீட் தேர்வை சாதாரணமாக நினைக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் தான் நீட் தற்கொலைகள் உள்ளன. வேறெங்கும் இல்லை. தமிழர் மரபணுவில் வீரம், தீரம், அறிவு செறிந்துள்ளது. இதை மொழி, இனம், ஜாதியால் நம்மை பிரிக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X