பொது செய்தி

தமிழ்நாடு

சொத்து வரி 25 சதவீதம் உயர்வு கிராம சபையில் மக்கள் எதிர்ப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், வீட்டு வரி உயர்த்த முடிவு செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது; ஊராட்சி தலைவி விமலா தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் செந்தில்குமார், தீர்மானங்கள் மற்றும் அரசின் அறிவிப்புகளை



மேட்டுப்பாளையம் : சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், வீட்டு வரி உயர்த்த முடிவு செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது; ஊராட்சி தலைவி விமலா தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் செந்தில்குமார், தீர்மானங்கள் மற்றும் அரசின் அறிவிப்புகளை வாசித்தார்.ஊராட்சி தலைவி விமலா பேசுகையில், ''ஊராட்சிக்கு ஒரு கோடியே, 22 லட்சத்து, 11 ஆயிரத்து, 643 ரூபாய் மின் கட்டண பாக்கி உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, 97 லட்சத்து, 25 ஆயிரத்து, 217 ரூபாய் கட்டணம் நிலுவை இருக்கிறது. குடிநீர் மற்றும் பல்வேறு வரிகள் வாயிலாக, 52 லட்சத்து, 38 ஆயிரத்து, 500 ரூபாய், பொதுமக்கள் செலுத்த வேண்டியுள்ளது.

மின் வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதால், குடிநீர் கட்டணத்தை, 30ல் இருந்து, 70 ரூபாயாகவும், வீட்டு வரியை, 25 சதவீதம் உயர்த்தவும், இச்சபையில் தீர்மானிக்கப்படுகிறது,'' என்றார்.இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், குடிநீர் கட்டணம் மற்றும் வீட்டு வரி உயர்த்த முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், துணை தலைவர் வினோத்குமார், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X