பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி மேலாடை துறந்த இடத்தில் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர்

Added : அக் 03, 2021
Share
Advertisement
மதுரை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதியில் காந்தி மேலாடை துறந்த இடத்திலுள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து காதி கிராம விற்பனை நிலைய முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அங்கு பார்வையாளர் குறிப்பேட்டில் 'முதல்வர் மு.க., ஸ்டாலின்' என எழுதி கையொப்பமிட்டார். பின் அங்குள்ள புகைப்படங்களை பார்வையிட்டார்.முதல்வர் வருகைக்கு முன்


மதுரை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதியில் காந்தி மேலாடை துறந்த இடத்திலுள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து காதி கிராம விற்பனை நிலைய முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அங்கு பார்வையாளர் குறிப்பேட்டில் 'முதல்வர் மு.க., ஸ்டாலின்' என எழுதி கையொப்பமிட்டார். பின் அங்குள்ள புகைப்படங்களை பார்வையிட்டார்.

முதல்வர் வருகைக்கு முன் நிதியமைச்சர் தியாகராஜன் காதி கிராம விற்பனை நிலையத்திற்கு வந்தார். அவருடன் 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கார்களில் வந்து இறங்கினர். குறுகிய இடமான காதி கிராம விற்பனை மையத்திற்குள் அமைச்சர் நுழைந்த பின், ஆதரவாளர்களும் செல்ல முயன்றதால் போலீசார் அவர்களை தடுக்க முயற்சித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதேநேரத்தில் அமைச்சர் மூர்த்தி துாரத்தில் காரை நிறுத்தி அங்கிருந்து விற்பனை நிலையத்திற்கு நடந்தே வந்தார். அவரது ஆதரவாளர்கள் போலீசார் அறிவுரையை ஏற்று அதற்கான இடங்களில் நின்றனர்.போலீஸ் கமிஷனர் பிரேமானந்சின்ஹா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், விற்பனை மைய உதவி இயக்குனர் பாரதி பங்கேற்றனர்.

கருப்பு 'மாஸ்க்': போலீஸ் 'அலர்ட்'

முதல்வர் வருகைக்கு முன் மேலமாசி வீதி பகுதியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அப்பகுதியில் சென்ற மக்களும் முதல்வரை பார்க்க காத்திருந்தனர். அப்போது கருப்பு மாஸ்க் அணிந்தவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

போலீசார் கூறுகையில், “கருப்பு மாஸ்க் அணிந்தவர்கள் முதல்வர் வருகையின்போது அதை கையில் ஏந்தினால் கருப்பு கொடி காட்டியது போல் இருக்கும் என்பதால் அவர்களை அப்புறப்படுத்தினோம்” என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X