வாக்குறுதிகளை இன்னும் தி.மு.க., நிறைவேற்றவில்லை: பா.ஜ., முன்னாள் தமிழக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாக்குறுதிகளை இன்னும் தி.மு.க., நிறைவேற்றவில்லை: பா.ஜ., முன்னாள் தமிழக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Added : அக் 03, 2021
Share
வேலுார்: தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என முன்னாள் பா.ஜ., தமிழக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினர்.வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் சி.பி., ராதாகிருஷ்ணன் ஊணை கிராமத்தில் பேசியதாவது: பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தி.மு.க., வெற்றி பெற்றது.
B.J.P,BJP,Bharatiya Janata Party,D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,பா.ஜ

வேலுார்: தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என முன்னாள் பா.ஜ., தமிழக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் சி.பி., ராதாகிருஷ்ணன் ஊணை கிராமத்தில் பேசியதாவது: பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தி.மு.க., வெற்றி பெற்றது. இன்னும் தி.மு.க., கொடுத்த பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., க்குள் கொண்டு வர பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டும், அதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிராகரித்து விட்டார். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து விட்டது.

தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வங்கி கணக்கில் நேரடியாக கூலிப்பணம் செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டதால் ஊழல்கள் நடக்கவில்லை. முன்பு ஏழைகளுக்கு மத்திய அரசு திட்டத்தில் கூரைகள் மட்டும் கட்டப்பட்டது. இப்போது வீடுகளே கட்டி தரப்படுகிறது.மத்தியில் ஊழல் இல்லாத ஆட்சி நடக்கிறது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் இது போன்ற மத்திய அரசின் திட்டங்கள் தடையின்றி தங்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X