பொது செய்தி

தமிழ்நாடு

கருணை அடிப்படையில் நியமன ஆணை வழங்கல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மற்றும் மேட்டூர் மின்பகிர்மான வட்டத்தில் பணிபுரிந்து, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களாகிய கள உதவியாளர்கள் (பயிற்சி) மோகன்ராஜ், ஆர்.மோகன்ராஜ், தமிழரசி, விஜயகுமார், உதவி வரைவாளர் மணிமாறன், அலுவலக உதவியாளர் சத்தியபிரியா ஆகிய, ஆறு பேருக்கு, கல்வித் தகுதி மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார். தொடர்ந்து,

நாமக்கல்: நாமக்கல் மற்றும் மேட்டூர் மின்பகிர்மான வட்டத்தில் பணிபுரிந்து, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களாகிய கள உதவியாளர்கள் (பயிற்சி) மோகன்ராஜ், ஆர்.மோகன்ராஜ், தமிழரசி, விஜயகுமார், உதவி வரைவாளர் மணிமாறன், அலுவலக உதவியாளர் சத்தியபிரியா ஆகிய, ஆறு பேருக்கு, கல்வித் தகுதி மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார். தொடர்ந்து, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், நாகமணி, மாதேஸ்வரி, கருப்பண்ணன், சக்கரபாணி, சரித்திரா ஆகியோருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது. மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த கந்தசாமி, சிவா, சுப்பன் ஆகியோரை கலெக்டர் ஸ்ரேயா சிங் நலம் விசாரித்தார். திருச்செங்கோடு நகராட்சி, சூரியம்பாளையத்தில், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த எட்டு பேருக்கு, தலா, 5,200 ரூபாய் நிவராண உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், ஆர்.டி.ஓ., இளவரசி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X