பொது செய்தி

தமிழ்நாடு

பென்ஷன் வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழ்நாடு சி.பி.எஸ்.,- 95 ஓய்வூதிய நலச் சங்க கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவில் முன் உள்ள தியாகிகள் ஸ்தூபியில் வைக்கப்பட்ட மஹாத்மா காந்தியின் படத்துக்கு பல்வேறு சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். அதில், சி.பி.எஸ்., -95 ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். மற்ற ஓய்வூதியர்களுக்கு

நாமக்கல்: தமிழ்நாடு சி.பி.எஸ்.,- 95 ஓய்வூதிய நலச் சங்க கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவில் முன் உள்ள தியாகிகள் ஸ்தூபியில் வைக்கப்பட்ட மஹாத்மா காந்தியின் படத்துக்கு பல்வேறு சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். அதில், சி.பி.எஸ்., -95 ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். மற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவது போல், ஆண்டு தோறும், பஞ்சப்படி உயர்த்தி வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட ஆண்டு நிவாரணம், தொடர்ந்து வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளில், நியதிக்கு பொருந்தாத வாதங்களை சமர்ப்பித்து வழக்கை தொடர்ந்து நீடிப்பதை தவிர்த்து, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள், மஹாத்மா காந்தி படத்தின் முன் வைத்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டமைப்பின், நாமக்கல் மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி, ஓய்வு பெற்ற கூட்டுறவு துறை பணியாளர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X