பொது செய்தி

தமிழ்நாடு

இரவு முழுவதும் நீடித்த தூய்மை பணி

Added : அக் 03, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் மழைநீர் குறைந்த பின்பு, இரவு முழுவதும் வடிகால் அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது. பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர்நிலைகள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள், என எங்கு பார்த்தாலும் மழை தண்ணீர் ஆறாக சென்றது. மாலை, 4:00 மணிக்கு மேல் தண்ணீர் மெல்ல மெல்ல குறைந்தது.

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் மழைநீர் குறைந்த பின்பு, இரவு முழுவதும் வடிகால் அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது. பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர்நிலைகள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள், என எங்கு பார்த்தாலும் மழை தண்ணீர் ஆறாக சென்றது. மாலை, 4:00 மணிக்கு மேல் தண்ணீர் மெல்ல மெல்ல குறைந்தது. இதன் பின்பு நகராட்சி நிர்வாகம் மூலம், பள்ளிபாளையம் நான்கு சாலை, பாலம் சாலை, ஒன்பதாம்படி ஆகிய பகுதியில் செல்லும் பிரதான வடிகாலில் பொக்லைன் மூலம் அடைப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இந்த பணிகள் இரவு முழுவதும் நடந்தது. நேற்று காலை தண்ணீர் சென்ற பகுதியில் உள்ள குப்பை, மண் குவியல் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மழையால், ஆர்.எஸ்., வளைவு, வசந்தநகர் மற்றும் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. பாலம் சாலையில் உள்ள மின்மாற்றியின் அடிப்பகுதி முற்றிலும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் காணப்பட்டது. அதை சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒன்பதாம்படி பகுதியில் வடிகால் அருகே இருந்த, ஒரு வீட்டின் அடிப்பகுதி சேதமடைந்தது. அதே போல ஒரு வீட்டின் முன்பகுதியில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் உடைந்து விழுந்து விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X