பொது செய்தி

தமிழ்நாடு

காதி கிராப்டில் தீபாவளி விற்பனை

Added : அக் 03, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள காதி கிராப்டில் காந்தியடிகளின், 153வது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, மஹாத்மா காந்தியின் படத்தை திறந்து வைத்து, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். முதல் விற்பனையை, தொழிலதிபர் செல்வக்குமார் பெற்றுக் கொண்டார். நாமக்கல் காதி கிராப்ட்

நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள காதி கிராப்டில் காந்தியடிகளின், 153வது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, மஹாத்மா காந்தியின் படத்தை திறந்து வைத்து, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். முதல் விற்பனையை, தொழிலதிபர் செல்வக்குமார் பெற்றுக் கொண்டார். நாமக்கல் காதி கிராப்ட் மற்றும் சேந்தமங்கலம் தற்காலிக கதர் விற்பனை நிலையத்துக்கு, நடப்பு, 2021-22ம் ஆண்டுக்கு, 1.48 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பி.டி.ஓ., அலுவலகங்களில் தேவைக்கேற்றவாறு, குறிப்பிட்ட நாட்களில், சிறப்பு விற்பனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும் விற்பனை நடக்கிறது. நடப்பாண்டு, கதர் பருத்தி, பாலி மற்றும் பட்டு ரகங்களுக்கு, 30 சதவீதம் தள்ளுபடியும், ஒரு சில பட்டு ரகங்களுக்கு, 50 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் கதர் அங்காடி மேலாளர் தாராசவுத்திரி, தற்காலிக கதர் விற்பனை நிலைய மேலாளர் நாகராஜ், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X