பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 460 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 12, 19ல், 26 என, மூன்று கட்டமாக, மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. இன்று, நான்காம் கட்டமாக, 'மெகா' கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள். அரசு தொடக்க,

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 12, 19ல், 26 என, மூன்று கட்டமாக, மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. இன்று, நான்காம் கட்டமாக, 'மெகா' கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள். அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள, 439 நிலையான முகாம்கள் மூலமாகவும், 21 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் என, மொத்தம், 460 முகாம்கள், காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை, கொரோனா நோய் 'மெகா தடுப்பூசி முகாம்' நடக்கிறது. இம்முகாம் பணிகளில், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், பயிற்சி செவிலியர்கள், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'முகாமில், அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள், முழுமையாக பங்கேற்று, இதுவரை, ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவர்களும், முதலாம் தவணைபோட்டு முடித்து, இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும், தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்' என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X