பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தொடர் மழை: 2ம் நாளில் 175 மி.மீ., பதிவு

Added : அக் 03, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், பெரும்பாலான பகுதிகளில், லேசான மற்றும் கனமழை பெய்து வருகிறது. கடந்த, 30 இரவு, விடிய விடிய பெய்த கனமழையால், பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில், மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்தது. மேலும், சாலைகளில், வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்கள், வாகன

நாமக்கல்: தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், பெரும்பாலான பகுதிகளில், லேசான மற்றும் கனமழை பெய்து வருகிறது. கடந்த, 30 இரவு, விடிய விடிய பெய்த கனமழையால், பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில், மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்தது. மேலும், சாலைகளில், வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இரண்டாம் நாளாக நேற்று முன்தினம் மாவட்டத்தில், பரவலாக மழை பெய்தது. நேற்று மதியம், 2:00 மணி முதல், மோகனூர், ப.வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில், இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலை, 7:00 மணிவரை, பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு: எருமப்பட்டி, 5, மங்களபுரம், 5, மோகனூர், 59, நாமக்கல், 30, புதுச்சத்திரம், 13, ராசிபுரம், 36.20, சேந்தமங்கலம், 7, திருச்செங்கோடு, 5, கலெக்டர் அலுவலகம், 10, கொல்லிமலை, 5 என, மொத்தம், 175.20 மி.மீ., மழை பதிவானது.

* சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பழையபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு, 7:00 முதல், 8:00 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. எருமப்பட்டி, கொல்லிமலையிலும் மழை பெய்தது.


* நாமகிரிப்பேட்டை பகுதியில், மாலை, 3:00 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. 45 நிமிடங்கள் பெய்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, தண்ணீர்பந்தல்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான தூறலுடன் மழை நின்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X