பொது செய்தி

தமிழ்நாடு

ஒருவந்தூர், காக்காவேரியில் கிராமசபை கூட்டம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
மோகனூர்: மோகனூர் ஒன்றியம், ஒருவந்தூர் ஊராட்சியில், கிராமசபா கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் அருணா தலைமை வகித்தார். மோகனூர், கரூர் மாவட்டம், நெரூர் காவிரி ஆற்றின் இடையே கதவணை அமைக்கப்படும் என அறிவித்ததற்கு, முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மோகனூரில் கதவணை அமைந்தால், ஒருவந்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள்,

மோகனூர்: மோகனூர் ஒன்றியம், ஒருவந்தூர் ஊராட்சியில், கிராமசபா கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் அருணா தலைமை வகித்தார். மோகனூர், கரூர் மாவட்டம், நெரூர் காவிரி ஆற்றின் இடையே கதவணை அமைக்கப்படும் என அறிவித்ததற்கு, முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மோகனூரில் கதவணை அமைந்தால், ஒருவந்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் ராசிபுரம் பட்டணம் சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும். அதனால், திட்டத்தை மறுபரிசீலனை செய்து, மோகனூருக்கு பதில், நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் அல்லது வடுகப்பட்டி என மாற்ற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருவந்தூர் நீரேற்று பாசனதாரர்கள் சங்கத்தலைவர் செல்ல ராசாமணி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

* ராசிபுரம் ஒன்றியம் காக்காவேரியில் தலைவர் முருகேசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள், தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்யாத பணிகளை செய்ததாக கூறுவதாக மறுப்பு தெரிவித்தனர். வாக்குவாதம் முற்றவே கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X