சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்த மான் புதைப்பு; விவசாயிகள் கைது

Added : அக் 03, 2021
Share
Advertisement
கொல்லிமலை: கொல்லிமலை வனப்பகுதியில் இறந்த மானை புதைத்த விவசாயிகளை வனத்துறையினர் கைது செய்தனர். கொல்லிமலை பைல்நாடு பகுதியில் மின்வேலியில் சிக்கி இறந்த மான்களை விவசாய நிலத்தில் புதைத்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வனத்துறை பறக்கும்படை அலுவலர் பழனிசாமி, ராசிபுரம் வனச்சரகர் தனபால் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விவசாயி சுப்ரமணியின், 62, வேளாண்

கொல்லிமலை: கொல்லிமலை வனப்பகுதியில் இறந்த மானை புதைத்த விவசாயிகளை வனத்துறையினர் கைது செய்தனர். கொல்லிமலை பைல்நாடு பகுதியில் மின்வேலியில் சிக்கி இறந்த மான்களை விவசாய நிலத்தில் புதைத்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வனத்துறை பறக்கும்படை அலுவலர் பழனிசாமி, ராசிபுரம் வனச்சரகர் தனபால் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விவசாயி சுப்ரமணியின், 62, வேளாண் நிலத்தில் மின்வேலியில் சிக்கி இரண்டு மான்கள் இறந்தது தெரிந்தது. சுப்ரமணியும் அவரது தோட்டத்தில் வேலை செய்யும் அப்புசாமியும், 58, மான்களை விவசாய நிலத்தில் புதைத்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த வனத்துறையினர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X