பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி விற்பனை தொடக்கம்: கதர், பட்டு ரகத்துக்கு 30 சதவீதம் தள்ளுபடி

Added : அக் 03, 2021
Share
Advertisement
கரூர்: 'நடப்பாண்டிற்கான தீபாவளி கதராடை விற்பனையில், 1.48 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, டி.ஆர்.ஓ., தெரிவித்தார்.மஹாத்மா காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் தான்தோன்றிமலை கதர் அங்காடியில் கதர் ஆடைகளின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.ஓ., லியாகத் விற்பனையை துவக்கி வைத்ததார். பின்னர் அவர் கூறியதாவது:

கரூர்: 'நடப்பாண்டிற்கான தீபாவளி கதராடை விற்பனையில், 1.48 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, டி.ஆர்.ஓ., தெரிவித்தார்.


மஹாத்மா காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் தான்தோன்றிமலை கதர் அங்காடியில் கதர் ஆடைகளின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.ஓ., லியாகத் விற்பனையை துவக்கி வைத்ததார். பின்னர் அவர் கூறியதாவது: கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால் நவீன நாகரிகத்திற்கு ஏற்றவாறு புத்தம் புதிய வடிவமைப்புகளில் நெசவுசெய்யப்படும் கதராடைகள் கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில், கடந்த ஆண்டு, 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டிற்கான தீபாவளி விற்பனையில், 1.48 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு, 30 சதவீதமும் சில பட்டு ரகங்களுக்கு, 50 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மக்கள் வசதிக்காக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தற்காலிக கதர் அங்காடிகள் துவக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேன், குளியல் சோப்புகள் மற்றும் சலவை சோப்பு, பத்தி, சாம்பிராணி, மெழுகுவர்த்தி, ஜவ்வாது, வலி நிவாரணி தைலம் மற்றும் ஷாம்பு உள்ளிட்ட பல்வகையான கிராமப் பொருட்கள் கதரங்காடியில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. மேலும் காதி கிராப்ட் பொருட்களை, https://tnkvib.org/ என்ற இணைய தளத்திலும் வாங்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X