பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்: போலீசாருக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி., அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்: போலீசாருக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி., அறிவுரை

Added : அக் 03, 2021
Share
கரூர்: ''பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்,'' என, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி., சரவணசுந்தர் பேசினார்.கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், டூவீலர் ரோந்து பீட் போலீஸ் ஆபீசர்ஸ் பணியை தொடங்கி வைத்த டி.ஐ.ஜி., சரவண சுந்தர் பேசியதாவது: முதலில் தனித்தனியாக சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதில், சிறிது மாற்றம் செய்யப்பட்டு டூவீலரில் இரண்டு பேர் பீட்

கரூர்: ''பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்,'' என, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி., சரவணசுந்தர் பேசினார்.


கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், டூவீலர் ரோந்து பீட் போலீஸ் ஆபீசர்ஸ் பணியை தொடங்கி வைத்த டி.ஐ.ஜி., சரவண சுந்தர் பேசியதாவது: முதலில் தனித்தனியாக சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதில், சிறிது மாற்றம் செய்யப்பட்டு டூவீலரில் இரண்டு பேர் பீட் போலீசாராக, 24 மணி நேரமும் ரோந்து செல்ல வேண்டும். அப்போது, பீட் போலீசார் பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு உதவியும் செய்ய வேண்டும். இதனால், போலீசார் மீது மக்களுக்கு நல்ல மதிப்பு ஏற்படும். குறிப்பிட்ட பகுதிகளில், பொதுமக்களிடம் பழக வேண்டும். பொதுமக்கள்- போலீசார் இடையே உள்ள இடைவெளியை, பீட் ஆபீசர்ஸ் குறைக்க வேண்டும். அப்போது, குற்றங்கள் தொடர்பாக தகவல்களை பொதுமக்கள் சொல்ல வாய்ப்பு ஏற்படும். பள்ளி, கல்லூரி பகுதிகளில் ஈவ்டீசிங் குறையும். பொது இடங்களில் மது அருந்துவது குறையும். வழிபாட்டு தலங்கள், வங்கிகள், நகை அடகு கடை, தனியாக முதியவர்கள் இருக்கும் வீடுகளையும் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு, பாதுகாப்பாக பீட் போலீஸ் ஆபீசர்ஸ் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பல்வேறு ஸ்டேஷன்களில் வழக்கு விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.எஸ்.பி., சுந்தர வடிவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X