பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூருக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகை; கரூர் வட்டாரத்தில் தொடரும் மழை

Added : அக் 03, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம், விட்டு விட்டு மழை பெய்தது. மாயனூர் கதவணைக்கு, 15 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று வந்தது.வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் நேற்று மதியம், 2:00 மணி முதல் கரூர் டவுன்

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம், விட்டு விட்டு மழை பெய்தது. மாயனூர் கதவணைக்கு, 15 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று வந்தது.


வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் நேற்று மதியம், 2:00 மணி முதல் கரூர் டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,): கரூர், 24, அரவக்குறிச்சி, 5.4, குளித்தலை, 35, கிருஷ்ணராயபுரம், 59, மாயனூர், 50, பஞ்சப்பட்டி, 23.2 மயிலம்பட்டி, 38 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 19.55 மி.மீ., மழை பதிவானது.

மாயனூர் கதவணை நிலவரம்: கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 11 ஆயிரத்து, 732 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 15 ஆயிரத்து, 239 கன அடியாக அதிகரித்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 14 ஆயிரத்து, 859 கன அடியும், மூன்று கிளை வாய்க்காலில், 450 கன அடியும் திறக்கப்பட்டது. அணைப்பகுதியில், 50 மி.மீ., மழை பெய்தது.

அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 362 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் நேற்று காலை, 6:00 மணி நில வரப்படி, 400 கன அடி தண்ணீரும், புதிய பாசனவாய்க்காலில், 350 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 82.45 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X