பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்புகளில் மழைநீர் தேக்கம்; பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
குளித்தலை: மேல தாளியாம்பட்டியில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் புகுந்தது. குளித்தலை அடுத்த, கருப்பத்தூர் பஞ்., மேலதாளியாம்பட்டி கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவு நீர் வடிகால் அமைக்க பொது மக்கள் கோரிக்கை

குளித்தலை: மேல தாளியாம்பட்டியில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் புகுந்தது. குளித்தலை அடுத்த, கருப்பத்தூர் பஞ்., மேலதாளியாம்பட்டி கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவு நீர் வடிகால் அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையினால் மழை தண்ணீர் விவசாய நிலத்தில் இருந்து கிராமத்திற்குள் புகுந்தது. தண்ணீர் வெளியே, முடியாததால், குடியிருப்பு பகுதியில் புகுந்தது. பொது மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. தாசில்தார் வெங்கடேஷ் தலைமையில் கருப்பத்தூர் பஞ்., தலைவர், துணைத்தலைவர், ஊரக வளர்ச்சி துறையினர் ஆகியோர், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் இருந்த ஆக்கிரமிரப்புகளை அகற்றி, குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றினர். சாலை மற்றும் தெருக்களில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி கழிவு நீர் வடிகால் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X