பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில், 14 ஆயிரம் கன அடியாக நேற்று அதிகரித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில், 14 ஆயிரம் கன அடியாக நேற்று அதிகரித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய பிலிகுண்டு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, நாட்றாம்பாளையம் பகுதிகளில் பெய்த மழையாலும், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 10 ஆயிரத்து, 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேசமயம் காவிரியில் குளிக்க தொடர்ந்து தடை நீடிப்பதால், இது தெரியாமல் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X