பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய, மாநில அரசு நிதியை கிராம வளர்ச்சிக்கு முறையாக பயன்படுத்த முதல்வர் உத்தரவு; எ.வ.வேலு

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: ''மத்திய, மாநில அரசு நிதியை கிராம வளர்ச்சிக்கு முறையாக பயன்படுத்த, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் பஞ்., கிராம சபா கூட்டத்தில், 22.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது: மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய,

திருவண்ணாமலை: ''மத்திய, மாநில அரசு நிதியை கிராம வளர்ச்சிக்கு முறையாக பயன்படுத்த, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் பஞ்., கிராம சபா கூட்டத்தில், 22.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது: மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய, கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிய, கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், முதல்வரின் பசுமை வீடு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட நிதி வருவாய் திட்டம், நபார்டு சாலை திட்டத்தில், மத்திய, மாநில நிதியை முறையாக பயன்படுத்தி சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் பேசி, சரியான நிதி ஒதுக்கீடு செய்து பஞ்., நிர்வாகம் மூலம் பணியை சரியாக செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அவர் பேசினார். செங்கம் அடுத்த காயம்பட்டு கிராம பஞ்., தலைவர் துணைவன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித நலத்திட்டங்களும் செயல்படுத்தவில்லை எனக்கூறி, அம்மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். வந்தவாசி அடுத்த புன்னை பஞ்.,ல் சேதமான மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்காததை கண்டித்து, கிராம மக்கள், காந்தியின் முத்திரையான கண், காது, வாய் மூடியவாறு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபா கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X