பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி ஆவின் ஜி.எம்., மீது லஞ்ச வழக்கு

Added : அக் 03, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர் ஆவின் முன்னாள் பொது மேலாளர் உள்பட ஆறு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஆவின் தலைமை அலுவலகம் உள்ளது. 2017-18ல் பொதுமேலாளராக பிரபாகரன், உதவி பொதுமேலாளராக முரளிபிரசாத் பணியாற்றினர். அப்போது பால் குளிரூட்டும் நிலையத்தில் பயன்படுத்த, 1.69 கோடிக்கு, 40 சுத்திகரிப்பு கருவிகள் வாங்கப்பட்டன. இவை மார்க்கெட்

வேலூர்: வேலூர் ஆவின் முன்னாள் பொது மேலாளர் உள்பட ஆறு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஆவின் தலைமை அலுவலகம் உள்ளது. 2017-18ல் பொதுமேலாளராக பிரபாகரன், உதவி பொதுமேலாளராக முரளிபிரசாத் பணியாற்றினர். அப்போது பால் குளிரூட்டும் நிலையத்தில் பயன்படுத்த, 1.69 கோடிக்கு, 40 சுத்திகரிப்பு கருவிகள் வாங்கப்பட்டன. இவை மார்க்கெட் விலையை விட அதிக விலைக்கு, தரமற்ற நிலையில் வாங்கியதும், வாங்கிய மூன்று நிறுவனங்களும் போலியானது என்பதும் தெரிந்தது. இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். இதில் போலி நிறுவனங்களிடம் தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பிரபாகர், முரளி பிரசாத், போலி நிறுவன உரிமையாளர்கள் உதயகுமார், ரமேஷ், சரவணன், ஸ்ரீதர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தற்போது மதுரை மாவட்ட கிராமப்புற வாழ்வாதார பணிகள் கூடுதல் இயக்குனராக பிரபாகரன் பணி செய்கிறார். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் அலுவலக உதவி பொது மேலாளராக முரளிபிரசாத் பணியாற்றுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X