பொது செய்தி

தமிழ்நாடு

'நாவடக்கத்துடன் துரைமுருகன் பேச வேண்டும்'

Added : அக் 03, 2021
Share
Advertisement
வேலூர்: ''நாவடக்கத்துடன், துரைமுருகன் பேச வேண்டும்,'' என,, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.வேலூர் மாவட்டம், காட்பாடியில் நேற்று, ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆரை பற்றி துரைமுருகன் நா கூசாமல் அவதூறாக பேசியுள்ளார். எம்.ஜி.ஆர்., என் இதயக்கனி, 1967ல் வெற்றிக்கு காரணம் எம்.ஜி.ஆர்., என

வேலூர்: ''நாவடக்கத்துடன், துரைமுருகன் பேச வேண்டும்,'' என,, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் நேற்று, ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆரை பற்றி துரைமுருகன் நா கூசாமல் அவதூறாக பேசியுள்ளார். எம்.ஜி.ஆர்., என் இதயக்கனி, 1967ல் வெற்றிக்கு காரணம் எம்.ஜி.ஆர்., என அண்ணாதுரை சொன்னாரே. அவர் நம்பிக்கை துரோகியா. துரைமுருகனை படித்து பட்டதாரியாக்கினாரே, எம்.ஜி.ஆர்., அவர் துரோகியா. திரைப்படங்கள் மூலம் கொள்கைகளை பரப்பி, தி.மு.க., ஆட்சிக்கு வர காரணமான எம்.ஜி.ஆர்., நம்பிக்கை துரோகியா. மேடையில் எல்லோரும் சிரிக்க வேண்டும் என்பதற்காக நா கூசாமல் அவர் பேசக்கூடாது. எம்.ஜி.ஆரை அவதூறாக பேசிய துரைமுருகனுக்கு, கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். துரைமுருகன் நாவடக்கத்துடன் பேச வேண்டும். கடந்த, 1972ல், அ.தி.மு.க.,வை உருவாக்கி, 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். கட்சி ஆரம்பித்தபோது, கருணாநிதியால் பல்வேறு சோதனைகள் வந்தது. அதை எல்லாம் முறியடித்து எம்.ஜி.ஆர்., மூன்று முறை முதல்வரானார். ஆட்சிக்கு வருவதற்காக ஸ்டாலின், உதயநிதி அண்டை புளுகு, ஆகாச புளுகு பேசினர். ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்து விட்டார்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X