மிச்சம் வைத்த மது-சிக்கன் பேரனின் உயிரை குடித்தது: மாரடைப்பால் தாத்தா பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிச்சம் வைத்த மது-சிக்கன் பேரனின் உயிரை குடித்தது: மாரடைப்பால் தாத்தா பலி

Added : அக் 03, 2021
Share
வேலூர்: வேலூர் அருகே, தாத்தா மிச்சம் வைத்த மதுவை, குளிர்பானம் என நினைத்து, சிக்கனுடன் சாப்பிட்ட நான்கு வயது பேரன் இறந்தார். அதிர்ச்சியில் தாத்தா உயிரிழந்தார்.வேலூர் மாவட்டம், திருவலம் அருகே சுகர்மில் அண்ணா நகரை சேர்ந்தவர் சின்னசாமி, 62; விவசாயி. இவரது மகள் விஜயா, 35; பேரன் ருத்ரேஷ், 4; அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். குடிப்பழக்கமுள்ள சின்னசாமி தினமும் வீட்டில் மது

வேலூர்: வேலூர் அருகே, தாத்தா மிச்சம் வைத்த மதுவை, குளிர்பானம் என நினைத்து, சிக்கனுடன் சாப்பிட்ட நான்கு வயது பேரன் இறந்தார். அதிர்ச்சியில் தாத்தா உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே சுகர்மில் அண்ணா நகரை சேர்ந்தவர் சின்னசாமி, 62; விவசாயி. இவரது மகள் விஜயா, 35; பேரன் ருத்ரேஷ், 4; அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். குடிப்பழக்கமுள்ள சின்னசாமி தினமும் வீட்டில் மது குடிப்பார். நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால், இரவு 7:00 மணிக்கு வீட்டில் மது குடித்து விட்டு போதையில் படுத்து தூங்கி விட்டார். பக்கத்தில் ஒரு டம்ளரில் சிறிது மது, சிக்கன், மட்டன் துண்டு இருந்தது. அங்கு வந்த பேரன் ருத்ரேஷ், குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்துள்ளான். சிக்கனை சாப்பிட்டபோது, தொண்டையில் அடைத்ததில் மயங்கி விழுந்தான். இதை பார்த்த தாத்தா சின்னசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இருவரையும் குடும்பத்தினர் மீட்டு, வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சின்னசாமி ஏற்கனவே இறந்து விட்டது, பரிசோதனையில் தெரிய வந்தது. சிறுவன் ருத்ரேஷ் நேற்று காலை, 10:00 மணிக்கு இறந்தான். இதுகுறித்து திருவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X