பொது செய்தி

இந்தியா

இந்தியபோதைப்பொருள் தடுப்புச் சட்டம்; ஓர் விரிவான பார்வை

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை: தெற்கு மும்பையில் இருந்து கோவாவை நோக்கிச் சென்ற ஓர் ஆடம்பர பொழுதுபோக்கு கப்பலில் முன்னதாக செல்வந்தர்கள் கலந்துகொள்ளும் மது விருந்து நடைபெற்றது.இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பல செல்வந்தர்களின் மகன்கள் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை மேற்கொண்டனர். அங்கு
இந்தியபோதைப்பொருள் தடுப்புச் சட்டம்; ஓர் விரிவான பார்வை

மும்பை: தெற்கு மும்பையில் இருந்து கோவாவை நோக்கிச் சென்ற ஓர் ஆடம்பர பொழுதுபோக்கு கப்பலில் முன்னதாக செல்வந்தர்கள் கலந்துகொள்ளும் மது விருந்து நடைபெற்றது.

இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பல செல்வந்தர்களின் மகன்கள் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை மேற்கொண்டனர். அங்கு கொக்கைன், எம்டிஎம்கே, காரஸ், மேபிட்ரோன் உள்ளிட்ட போதை பொருட்கள் பலரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து ஆரியன் கான் உள்ளிட்ட பலர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் சிக்கியுள்ளனர். இது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் போதைப்பொருட்கள் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. பெரும்பாலும் அதிக செல்வம் படைத்தோர் மட்டுமே இவற்றை விலை கொடுத்து வாங்க முடியும்.
மும்பை ஸ்டார் ஹோட்டல்களிலும், ஆடம்பர பார்களிலும் போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. இதன் பின்னால் ஒரு பெரிய சர்வதேச சந்தை இயங்கிவருகிறது. இந்த போதைப் பொருள் விற்பனையில் கோடிக்கணக்கான பணம் புழங்கி வருகிறது. இவற்றை தடுக்க போதை பொருள் சிறப்புப் பிரிவினர் அவ்வப்போது சொகுசு பார்களில் ரெய்டு நடத்துவது வாடிக்கை.

இதேபோல தற்போது சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட இந்த ரெய்டில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் சிக்கியுள்ளார். தொடர்ந்து இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலிவுட் பிரபலங்களில் இருந்து பெரிய தொழிலதிபர்களின் வாரிசுகள்வரை பலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுக்கு அவ்வப்போது போதை பொருட்களை சப்ளை செய்ய இடைத்தரகர்களும் உண்டு.இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்படுத்தும் கலாச்சாரம் பெருநகரங்களில் அதிகரித்து வருவதை அடுத்து இச்சம்பவம் சமூகவலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.

போதை பொருள் தடுப்புக்காக 1985ஆம் ஆண்டு என்டிபிஎஸ் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறைக்கு கீழ் அடங்கும் இந்த சட்டம் மூலமாக போதைப்பொருள் தயாரித்தல், கடத்தல், விற்றல், பதுக்குதல், பயன்படுத்துதல் ஆகிய அனைத்தும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


சட்டப்பிரிவு 31-ஏ படி போதை வழக்குகளில் சிக்குபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நீதிமன்றம் கருணை அடிப்படையில் இந்த வழக்கில் இருந்து விடுதலை அளிக்கிறது. சட்டப்பிரிவு 64-ஏ படி போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

போதைப்பொருள் வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு வியாபாரிகள்போல அதிக அளவு தண்டனை கிடையாது. இவர்களை ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்க இயலும். 1985 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்த போதைத் தடுப்புச் சட்டம், 1989, 2001 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-202103:25:58 IST Report Abuse
சூரியா எத்தனை ஆதாரங்களை வைத்துக் கொண்டு, ஷாருக்கான் மகனைக் கைது செய்தாலும், நம் நாட்டின் அறிவுஜீவிகள் இந்த நடவடிக்கையை இந்திய அரசின் intolerant action என வசைபாடத் தயாராகிவிட்டார்கள்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
03-அக்-202118:49:45 IST Report Abuse
மலரின் மகள் ஈரான் பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் தான் உலக ஏற்றுமதியில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். வளைகுடா பிராந்தியத்தில் போதைவஸ்துகளை பரவலாக விற்பதில் முன்னதர்கும், மற்ற உலகளாவிய தேசியங்களில் விற்பதற்கு பாகிஸ்தானும், உற்பத்திக்கு ஆப்கானும் என்று சொல்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் வந்து குவிகிறது இதில். அதனால் இத்தொழிலை விடப்போவதில்லை. சூதாட்டமும் போதைப்பொருளை பணம் கொட்டி குவிக்கும் தொழில்கள். தொடரத்தான் செய்யும். இதை எல்லாம் சொல்லப்பட்டாலும் சூப்பர் தமிழ் இன்போ என்று ஒரு யு டியூப் செய்தி நிறுவனம், ஜெயலட்சுமி என்று ஒரு மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தின் மூலம் சிறப்பாக பயிர்ச்சி பெற்று சில பெரிய செய்தி நிறுவனங்களில் கோலோச்சிவிட்டு இப்போது அதை நடத்துகிறார். மிகவும் துல்லியமாக ஆழ்ந்த ஆய்வுகளுடன் வெளிவரும் அறிக்கை போன்ற செய்திகளை தருகிறார். சீனாவிற்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவு. அதில் அவ்வளவு அருமையாக விளக்கியிருக்கிறார். சீனர்கள் தங்களின் மீன்பிடி படகுகள் என்ற போர்வையில் மீனவர்கள் போர்வையில் இராணுவமே போதை பொருட்களை கடத்தி விற்பதும், கேசினோ என்று சொல்லக்கூடிய சூதாட்டங்களில் பணத்தை அள்ளியதும் அவர்கள் செய்துவரும் ஏமாற்று வேலைகளையும் புரியவைக்கிறார். நிறைய யு டியூப் சேனல்களில் இப்போதெல்லாம் சீனாவை ரோக் கன்றி என்றுதான் சொல்லிவருகிறார்கள். பின்புலத்தில் உலகின் போதை பொருட்கள் வர்த்தகத்தில் இருப்பது சீனா தான் என்று பலரும் சொல்லிவருகிறார்கள். இலங்கையிலும் முந்தைய காலங்களில் அவர்கள் தீவிரவாதிகள் மூலம் செய்து வந்தார்கள். தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் சீனாவின் வர்த்தக ஏஜென்ட்கள். அவர்கள் மூலமாக அனைத்து ரகசிய தவறான செய்கைகளையும் செய்து பொருளீட்டி கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக கவனிக்கவேண்டும் நமது பத்திரிகை ஆராய்வச்சியாளர்கள். மக்களுக்கு உண்மையை வெளிக்கொண்டு வந்து சொல்லவேண்டும். சொல்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X