'உலகின் சிறந்த மருந்தகமாகத் திகழும் இந்தியா': உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: கடந்த 75 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்துப் பேட்டியளித்த அவர், இந்தியாவின் நான்கு சாதனைகள் குறித்து விளக்கினார். போலியோ நோயை முழுமையாக ஒழித்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தியது. கருவில் உள்ள குழந்தைகளின் எதிர்பாரா இறப்பு
மருந்தகம், இந்தியா, சவுமியா சாமிநாதன், சௌமியா சுவாமிநாதன்

புதுடில்லி: கடந்த 75 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேட்டியளித்த அவர், இந்தியாவின் நான்கு சாதனைகள் குறித்து விளக்கினார். போலியோ நோயை முழுமையாக ஒழித்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தியது. கருவில் உள்ள குழந்தைகளின் எதிர்பாரா இறப்பு சதவீதத்தை குறைத்தது உள்ளிட்ட இந்திய மருத்துவத்துறையின் சாதனை காரணமாக தற்போது உலகுக்கே இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆனாலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக காசநோய் சிகிச்சை, குழந்தைகளுக்கான மருத்துவ வசதி இந்தியாவில் குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தகவலின்படி குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறை இந்தியாவின் முக்கிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது. கொரோனா தாக்கம் இந்த நிலையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தற்போது மேலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


latest tamil news




வறுமை கோட்டுக்குகீழ் உள்ளவர்களை அதிகமாக பாதிக்கும் நோய்கள் குறித்து இந்திய மருத்துவத்துறை ஆராயவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஒருவாரமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகுபவர்களது எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-அக்-202104:46:38 IST Report Abuse
Mani . V அட்ரா சக்கை, அட்ரா சக்கை.
Rate this:
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
03-அக்-202122:30:19 IST Report Abuse
DSM .S/o PLM அய்யகோ ஐவரும் ஒரு சங்கி தானா ..தெரியாம இவ்ளோ நாள் தமிழச்சி னு சொல்லிட்டோமே ..விஸ்வநாதன் ஆனந் , ரவிச்சந்திரன் அஸ்வின், வரிசையில் பாராட்ட கூடாத இன்னுமொரு நம்மவா போல. தமி.. சாரி டுமீலன்ஸ் உசார்
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
03-அக்-202121:08:18 IST Report Abuse
elakkumanan ஏம்மா , இந்த செய்திக்கும் திரு மோடி அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதானே...........ஆமா, நாங்க அப்போதான் இந்த செய்திக்கு மகிழ்ச்சி அடைவதா அல்லது துக்கமடைவதா ன்னு முடிவு பண்ண முடியும்....இல்லைனா, இம்ரான் பாயி கிட்ட ஒரு கையெழுத்து வாங்கி இதே தகவலை சொல்லுங்க...நாங்க நம்புவதற்கு வசதியா இருக்கும்...ரெண்டுமே இல்லைனா, நாங்க சொல்வது ஒண்ணுதான்...............அது....மோடி ஒழிக..........ஏன்னா, இம்ரான் பாய் உண்மையை மட்டுமே சொல்வார்.............எங்களுக்கு உண்மை மட்டும்தான் பிடிக்கும்........யாரும் எங்களை ஏமாற்ற முடியாது.....ஆனால், நாங்களா சும்மா விளையாட்டுக்கு ஏமாந்து ஏமாந்து உங்களை ஏமாத்துவோம்..........ஹி ..ஹி.ஹி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X