அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 03, 2021
Share
அறிவியல் ஆயிரம்விண்வெளி, வசிப்பிட தினம்நகரங்களில் குடிநீர் உட்பட போதுமான தங்குமிட அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., முதல் திங்கள் (அக். 4) உலக வாழ்விட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. * உலகின் முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக் 1) ரஷ்யா 1957 அக். 4ல் விண்வெளிக்கு அனுப்பியது. விண்வெளியை அமைதியான, , பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள உலக

அறிவியல் ஆயிரம்

விண்வெளி, வசிப்பிட தினம்


நகரங்களில் குடிநீர் உட்பட போதுமான தங்குமிட அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., முதல் திங்கள் (அக். 4) உலக வாழ்விட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
* உலகின் முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக் 1) ரஷ்யா 1957 அக். 4ல் விண்வெளிக்கு அனுப்பியது. விண்வெளியை அமைதியான, , பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள உலக நாடுகளிடையே 1967 அக். 10ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவற்றை நினைவு படுத்தும் விதமாக ஐ.நா,. சார்பில் அக். 4 முதல் அக். 10 வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது.

தகவல் சுரங்கம்

உலக விலங்குகள் தினம்


விலங்குகளில் பல வகைகள் உள்ளன. இவை நமக்கு பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அக்.,4ல் உலக விலங்குகள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் 'பிரான்சிஸ் ஆப் அசிசியின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் இத்தினம் கடை பிடிக்கப்படுகிறது. 1931ல் இத்தினம் தொடங்கப்பட்டது. விலங்குகள் வீடு, காட்டு விலங்குகள் என
பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X